விஸ்வரூபத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் கமல் புதிய மனு
Page 1 of 1
விஸ்வரூபத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் கமல் புதிய மனு
கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படத்தில் முஸ்லீம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த 23-ந் தேதி இந்த படத்தை திரையிட 15 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் விதித்தனர்.
இந்நிலையில், கடந்த 24-ந் தேதி கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அன்று மாலையே விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அதன்பின்னரே தீர்ப்பு அளிக்கப்படும் என்று 28-ந் தேதி வரை விசாரணையை ஒத்தி வைத்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், கமலின், ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், விஸ்வரூபம் படத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை உடனே நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஞ்சிதா சர்ச்சையில் உருவான ‘சத்யானந்தா’ படத்தின் தடையை நீக்க மனு ஜூன் 30, 2012 | தமிழ் சினிமா
» ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்
» விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்
» விஸ்வரூபம் படத்துக்கான தடையை விலக்க வேண்டும்
» குர்ஆன் தொடர்பான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்
» ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்
» விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்
» விஸ்வரூபம் படத்துக்கான தடையை விலக்க வேண்டும்
» குர்ஆன் தொடர்பான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum