தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்

Go down

ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல் Empty ஆந்திராவில் தடையை தாண்டுகிறார் கமல்

Post  ishwarya Mon Mar 04, 2013 5:52 pm

விஸ்வரூபம் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. திருச்சியில் அவசரமாக கூடிய திரையரங்கு உ‌‌ரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் டிடிஹெச்-சில் வெளியிடும் எந்தப் படத்தையும் திரையரங்கில் வெளியிடுவதில்லை என்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெ‌ரிவித்தனர்.

ஆனால் ஆந்திராவில் இந்தத் தடையை கமல்ஹாசன் வெற்றிகரமாக‌த் தாண்டுகிறார்.

பொங்கலை முன்னிட்டு முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. இதனால் விஸ்வரூபத்தை சில நாட்கள் தள்ளி வெளியிடுவதாக இருந்தார் கமல். அத்துடன் டிடிஹெச் பிரச்சனையும் சேர 11ஆம் தேதி விஸ்வரூபம் தெலுங்குப் பதிப்பு வெளியாக வாயப்பேயில்லை என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அபயக்கரம் ஒன்று கமலுக்கு கிடைத்திருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான தாச‌ரி நாராயணராவ் விஸ்வரூபம் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கமலின் டிடிஹெச் முயற்சியை ஆத‌ரித்துப் பேசினார். படத்தின் தெலுங்கு விநியோக உ‌‌ரிமையை அவர் வாங்குவார் எனவும் அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் கமலுக்கு ஆந்திராவில் விஸ்வரூபத்தை வெளியிட நான் திரையரங்கு தருகிறேன் என தாச‌ரி நாராயணராவ் தெ‌ரிவித்துள்ளார்.

இதனால் விஸ்வரூபம் படம் தெலுங்கில் தடையில்லாமல் வெளியாகும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
விஸ்வரூபம் ஆந்திரா, கமல், தாசரி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்
» விஸ்வரூபத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் கமல் புதிய மனு
» ஆந்திராவில் வாஷ் அவுட்டான சகுனி
» அனுஷ்காவுக்கு திடீர் வாந்தி மயக்கம்! ஆந்திராவில் பரபரப்பு
» விஸ்வரூபம் படத்துக்கான தடையை விலக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum