'பத்ம பூஷன்' விருது வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது: மலையாள நடிகர் மது வேதனை
Page 1 of 1
'பத்ம பூஷன்' விருது வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது: மலையாள நடிகர் மது வேதனை
மலையாள படவுலகின் பழம்பெரும் நடிகர் மது. தேசிய விருது பெற்ற ‘செம்மீன்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘தர்மதுரை’ படத்தில் ரஜினிக்கு தந்தையாக நடித்துள்ளார்.
இவரது கலைசேவையை பாராட்டி ‘பத்மபூஷன்’ விருது வழங்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்திருந்தார். இதனால் மதுவை கவுரவப்படுத்தும் வகையில் ‘பத்மபூஷன்’ விருது அவருக்கு வழங்கப்படும் என்று மலையாள திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பட்டியலில் மதுவுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷன் விருதை எதிர்பார்த்து இருந்த மதுவுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அவர் கூறும்போது, கேரள அரசு ‘பத்மபூஷன்’ விருதுக்கு எனது பெயரை பரிந்துரை செய்தும் அந்த விருதை வழங்காமல் அதைவிட குறைந்த ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. டெல்லியில் சதி நடந்திருப்பதாக கருதுகிறேன். ‘பத்மஸ்ரீ’ விருது வாங்க செல்ல வேண்டாம் என்று கேரள அரசு கூறினால் நான் விருது வாங்க டெல்லிக்கு செல்ல மாட்டேன் என்றார்.
பிரபல பின்னணி பாடகியான ஜானகிக்கு ‘பத்மபூஷன்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு காலம் தாழ்த்தி வழங்கியதால் அந்த விருதை வாங்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_INNER_468x60.gif
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோபம் இல்லை - பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி
» கோபம் இல்லை – பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது.. டைரக்டர் லிங்குசாமி
» விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது
» கோபம் இல்லை – பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது.. டைரக்டர் லிங்குசாமி
» விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum