விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது
Page 1 of 1

விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைக்காமல் போனதாகத் தெரிகிறது.
பத்மபூஷண் விருது பெறுவோரின் தகுதிப் பட்டியலில் கமலஹாசன் பெயர் இருந்ததாகவும், கடைசித் தருணத்தில் அவரது பெயரை மத்திய அரசு நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.
"பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் வரை, கமல் பெயர் விருது பெறுவோர் தகுதிப் பட்டியலில் இருந்தது. அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால், பத்ம விருதுக்கு கமலின் பெயரை அறிவிப்பதில் மத்திய அரசுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே விருது பெறுவோர் பட்டியலை வெளியிடுவதில் வெள்ளிக்கிழமை தாமதம் ஏற்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டது' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இம்முறை பத்மபூஷண் விருதுக்காக, அறிவிக்கப்பட்ட 24 பேரில் 8 பேர் கலைத் துறையைச் சேர்ந்தவர்கள்.
பலமுறை தேசிய விருது பெற்ற கமலஹாசனுக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷண் விருதுக்காக கமலஹாசன் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பிரச்னையால் கமலுக்கு பத்மபூஷன் மறுப்பு…?
» 'பத்ம பூஷன்' விருது வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது: மலையாள நடிகர் மது வேதனை
» விஸ்வரூபம் - கமலை ஆதரிக்கும் திரையுலகினர்
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» நார்வே திரைப்பட விழா - பிரபுசாலமனுக்கு விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum