தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படம் பார்க்க சித்தூர் தியேட்டரில் குவிந்த வேலூர் கமல் ரசிகர்கள்

Go down

விஸ்வரூபம் படம் பார்க்க சித்தூர் தியேட்டரில் குவிந்த வேலூர் கமல் ரசிகர்கள் Empty விஸ்வரூபம் படம் பார்க்க சித்தூர் தியேட்டரில் குவிந்த வேலூர் கமல் ரசிகர்கள்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:43 pm

கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வேலூரில் இருந்து சுமார் 40 கீ.மீ. தொலைவில் உள்ள ஆந்திர மாநிலம் சித்தூரில் விஸ்வரூபம் படம் தெலுங்கில் ரீலிசாகி உள்ளது.

இங்குள்ள தியேட்டரில் விஸ்வரூபம் படம் பார்க்க வேலூர் ரசிகர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தனி வாகனங்களில் சென்றனர். அவர்கள் அங்கு படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், காஞ்சீபுரம் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தியேட்டரில் குவிந்தனர்.

ஏராளமான தமிழக ரசிகர்கள் சித்தூர் தியேட்டரில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் சத்தியநாதன் கூறியதாவது:-

வேலூரில் இருந்து சித்தூரில் உள்ள தியேட்டருக்கு சென்று விஸ்வரூபம் படம் தெலுங்கில் பார்த்தோம். தியேட்டரில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்ட கமல் ரசிகர்கள் குவிந்திருந்தனர். படத்தில் அசம்பாவிதம் ஏற்படுத்தும் விதத்தில் காட்சிகள் இல்லை. தமிழில் பார்க்க முடியாதது ஏமாற்றமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூருக்கு செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை: கமல் ரசிகர் விசேஷ ஏற்பாடு
» தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : அபிராமி மெஹாமால் புதுடெக்னிக்!!
»  விஸ்வரூபம் பார்க்க வெளிமாநிலங்களுக்கு பாயும் ரசிகர்கள்
» விஸ்வரூபம் பார்க்க கேரளாவில் அலை மோதும் தமிழக ரசிகர்கள்
» ஆந்திர எல்லையான சத்தியவேட்டில் விஸ்வரூபம் பார்க்க குவியும் ரசிகர்கள்: கட்டுச்சோற்றுடன் பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum