ஆந்திர எல்லையான சத்தியவேட்டில் விஸ்வரூபம் பார்க்க குவியும் ரசிகர்கள்: கட்டுச்சோற்றுடன் பயணம்
Page 1 of 1

சென்னையில் இருந்து 2 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள தமிழக எல்லைப்பகுதியான சத்திய வேட்டில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு உள்ளது.
சத்யவேடு பஜாரை கடந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் வரதையாபாளையம் சாலையில் ஸ்ரீனிவாசா திரையரங்கம் உள்ளது.
ஏ.சி. வசதி கூட செய்யப்படாத இத்தியேட்டரில் தமிழ் மொழியில் 4 காட்சிகளாக திரையிடப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரசிகர்கள், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு பிக்னிக் போவது போல சத்யவேடு பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். தியேட்டரிலேயே கொண்டு வந்த உணவை சாப்பிடுகிறார்கள்.
தியேட்டர் உரிமையாளர் ஹேமேந்திரா கூறியதாவது:-
நான் கமலின் தீவிர ரசிகர். அவரது புதுப்படம் எப்போது வெளியானாலும் சென்னை சென்று பார்த்து விடுவேன். எனது தியேட்டரிலேயே அதனை தமிழில் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம். இந்த வாய்ப்பை நானே விரும்பி வலுகட்டாயமாக விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றேன்.
கடந்த 28-ந்தேதி முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வாறு உள்ளனர். இரவு காட்சிக்கு தாமதமாக வரும் சில ரசிகர்கள் இங்கேயே லாட்ஜிகளில் ரூம் எடுத்து தங்கி மறுநாள் படம் பார்த்து விட்டு செல்கின்றனர். நேற்றைய காட்சிக்கு மாமல்லபுரம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்தனர்.
இந்த ரசிகர்கள் கூட்டம் இன்றும் (சனி) நாளையும் (ஞாயிறு) வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.. தமிழில் இருந்து தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட எத்தனையோ படங்களை நான் திரையிட்டு இருக்கிறேன்.
குறிப்பாக எந்திரனின் தெலுங்கு பதிப்பு கூட இங்கு திரையிடப்பட்டு உள்ளது. ஆனால் அதை விட இந்த விஸ்வரூபத்துக்கு கூட்டம் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பார்க்க வெளிமாநிலங்களுக்கு பாயும் ரசிகர்கள்
» விஸ்வரூபம் பார்க்க கேரளாவில் அலை மோதும் தமிழக ரசிகர்கள்
» விஸ்வரூபம் படம் பார்க்க சித்தூர் தியேட்டரில் குவிந்த வேலூர் கமல் ரசிகர்கள்
» வள்ளுவர் கோட்ட விழா.. குவியும் ரசிகர்கள்.. வருவாரா ரஜினி?
» படம் நல்லால்லேன்னா யார் சொன்னாலும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்! – ரஜினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum