தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூருக்கு செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை: கமல் ரசிகர் விசேஷ ஏற்பாடு

Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூருக்கு செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை: கமல் ரசிகர் விசேஷ ஏற்பாடு Empty விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூருக்கு செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை: கமல் ரசிகர் விசேஷ ஏற்பாடு

Post  ishwarya Sat Mar 16, 2013 5:34 pm


கமல் நடித்து தயாரித்த விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. முஸ்லிம் அமைப்புகள் படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் விஸ்வரூபம் படத்தை வெளியிட தற்காலிகமாக தடை செய்துள்ளது. இது கமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாகாவிட்டாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வெளியானது. இதனால் தமிழகத்தில் உள்ள கமல் ரசிகர்கள் பெங்களூர் சென்று விஸ்வரூபம் படத்தை பார்த்து வருகின்றனர்.

விஸ்வரூபம் வெற்றி அடைய வேண்டும். எவ்விதத்திலும் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக சென்னையை சேர்ந்த கமல் ரசிகர் ஒருவர் புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளார். தனியார் ஆம்னி பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடிய இணைய தளம் நடத்தி வரக்கூடிய ரசிகர் அருண் ஆதியப்பன். விஸ்வரூபம் படத்தை பார்க்க அவரது அலுவலக ஊழியர்கள் பெங்களூர் செல்ல திட்டமிட்டனர்.

அவர்களுக்கு பஸ் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கி அனுப்பி வைத்த அருண் ஆதியப்பன் இதே போன்று மற்றவர்களுக்கும் சலுகை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். டிக்கெட் கூஸ்.காம் இணைய தளத்தில் விஸ்வரூபம் பாஸ்வேர்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் 5 சதவீத கட்டண சலுகை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எந்த பயணியாக இருந்தாலும் டிக்கெட் முன்பதிவு செய்தால் அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். சலுகை கட்டணம் பெறுபவர்கள் அங்கு சென்று விஸ்வரூபம் படம் பார்க்கிறார்களா? என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

எங்களது இணைய தளத்தில் வெளி மாநிலங்களில் எந்தெந்த தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம். அதை பயணிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அருண் ஆதியப்பன் கூறினார். ஸ்ரீஹரி நாராயணன் என்பவர் முதலாவது இந்த சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அவர் கூறும்போது, விஸ்வரூபம் படம் பார்க்க ஆசைப்பட்டேன். பெங்களூருக்கு வேலை விஷயமாக செல்வதால் அப்படியே இந்த படத்தையும் பார்த்து விடலாம் என டிக்கெட் புக் பண்ணினேன் என்றார். இதுவரை 112 பேர் சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படம் பார்க்க சித்தூர் தியேட்டரில் குவிந்த வேலூர் கமல் ரசிகர்கள்
» கமலஹாசன் ஏற்பாடு: ரஜினிகாந்த், வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்தார்
» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு வேட்டி-சேலை, இலவச உணவு; ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு
» கமல் என் ரசிகர் : டெல்லி கணேஷ்
»  விஸ்வரூபம் பார்க்க வெளிமாநிலங்களுக்கு பாயும் ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum