2013 புதுவருட ராசி பலன்கள் – ரிஷபம்
Page 1 of 1
2013 புதுவருட ராசி பலன்கள் – ரிஷபம்
6
rishapamசுற்றியிருப்பவர்களின் சுகத்திற்காக தன்னை அற்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
மகளின் கல்யாணத்திற்காக வரன் தேடி ஓய்ந்தீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன் அமைவார். கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக வழக்குகள் இழுபறியாகிக் கொண்டிருந்ததே! இனி சாதகமாக முடியும்.
மே 28-ந் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்பட்டுக் கொள்வீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதை தட்டி வைக்கப்பாருங்கள். உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒற்றைத் தலை வலி, சுவாசக் கோளாறு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு, கால்சியம் சத்துக் குறைவு என வரக்கூடும். நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது.
குற்றம் குறை பார்த்தால் சுற்றம் ஏதும் இல்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க முக்கிய நிகழ்ச்சிகளை தவிர மற்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பாதை மாறிச் செல்பவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். ஆனால் 29.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். கடுமையாக பேசாமல் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள்.
பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒத்துக்கித்தள்ளுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை, வருங்காலம் குறித்த பயமெல்லாம் விலகும். பிள்ளைகளை நீங்கள் எதிர்பார்த்த நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு.
இந்த வருடம் முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முடங்கியிருந்த நீங்கள், இனி முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வாங்கிய கடனில் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டிருந்தீர்களே! இனி அசலில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள், வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். ஆனால் 10.5.2013 முதல் 6.7.2013 வரை உடல் உஷ்ணம் அதிகமாகும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கடகம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – மிதுனம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – மேஷம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் –மீனம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கும்பம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – மிதுனம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – மேஷம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் –மீனம்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கும்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum