தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 புதுவருட ராசி பலன்கள் –மீனம்

Go down

2013 புதுவருட ராசி பலன்கள் –மீனம் Empty 2013 புதுவருட ராசி பலன்கள் –மீனம்

Post  meenu Sat Mar 16, 2013 5:21 pm


5


meenamமறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் நீங்கள், சண்டைக்காரர்களைக் கூட சந்தோஷப்படுத்துவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சுக்ரன் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைப்பட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

வங்கிக் கடனுக்காக காத்திருந்து, வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று போனதே! இனி பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். இடவசதியில்லாமல் தவிர்த்த கொண்டிருந்த வீட்டிலிருந்து காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர், வீட்டில் குடி நீர், கழிவு நீர் பிரச்னைகள் தீரும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.

மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாக போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்துச் செல்லும். கல்யாணம்,சீமந்தம்,காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல மணப்பெண் அமைவார். அவரின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.

ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் மனஉளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொலைகளை நினைத்து வருந்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum