தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 புதுவருட ராசி பலன்கள் – மேஷம்

Go down

2013 புதுவருட ராசி பலன்கள் – மேஷம் Empty 2013 புதுவருட ராசி பலன்கள் – மேஷம்

Post  meenu Sat Mar 16, 2013 5:30 pm



0


mesamஇனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம்,விலையுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். பழைய சொந்தம் பந்தஙகள் தேடி வருவார்கள்.

வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும்.
12.10.2013 முதல் டிசம்பர் முடிய கேதுபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் விபத்துகள், ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.

3.2.2013 முதல் 11.10.2013 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பரணி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் மனஉளைச்சல், ஆரோக்ய குறைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

1.1.2013 முதல் 2.2.2013 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

10.4.2013 முதல் 26.5.2013 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனமடைவதால் வீடு, மனை வாங்குவது, மற்றும் பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.

மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவு உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.

மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். சாமர்த்தியமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி முடிக்க வேண்டி வரும். மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.

வருடம் முடியும் வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும் ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் உங்களை புகழ்வதைப் போல் பேசி உங்களின் திறமையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்கள் சில ஆலோசனைகள் கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப்பாருங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum