குலதெய்வ கோவிலில் ரஜினிகாந்தின் பேரக்குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்
Page 1 of 1

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது கணவர் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு யாத்ரா (வயது 6), லிங்கா (2 1/2) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நடிகர் தனுஷின் சொந்த ஊர் தேனி மாவட்டம், மல்லிங்காபுரம் ஆகும். இவருடைய குலதெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் கோவில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் உள்ளது. இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து மூத்தமகன் யாத்ராவிற்கு மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தினார்.
நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய அண்ணன் டைரக்டர் செல்வராகவன், அக்காள் டாக்டர் விமலகீதா ஆகியோரின் குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலான கஸ்தூரி மங்கம்மாள் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்த டைரக்டர் கஸ்தூரிராஜா முடிவு செய்தார்.
இதையடுத்து டைரக்டர் கஸ்தூரி ராஜா, தனுஷ்-ஐஸ்வர்யா மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் நேற்று முத்துரெங்கபுரத்திற்கு காரில் வந்தார். கோவில் வளாகத்தில் நடிகர் தனுசின் மகன் லிங்கா, செல்வராகவனின் பெண் குழந்தை, மற்றும் டாக்டர் விமலகீதாவின் மகளுக்கு மொட்டை அடிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அருகில் உள்ள தோட்டத்தில் கிடா வெட்டப்பட்டு சமையல் நடந்தது. அந்த உணவுப்பொருட்கள் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு சாமிக்கு படையலிட்டு பின்னர் சாப்பிட்டனர்.
அதன்பிறகு மாலை 4 மணி அளவில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் அங்கிருந்து காரில் புறப்பட்டு தேனிக்கு வந்தனர். நடிகர் தனுஷ் குடும்பத்தினரை காண நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்தனர்.
நடிகர் தனுசின் தாயார் விஜயலட்சுமியின் சொந்த ஊரான சங்கராபுரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), நடிகர் தனுஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குலதெய்வ கோவிலில் ரஜினிகாந்தின் பேரக்குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்.
» நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு
» ரஜினிகாந்தின் ‘ராணா’விற்கு முன் ‘சுல்தான் – தி வாரியர்’
» குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?
» ரஜினிகாந்தின் அதிரடி: ஆடிப்போனார் மோகன்பாபு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum