தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2 மகன்கள் உள்ள நடிகை ஜீனத்அமன் 60 வயதில் மறுமணம்

Go down

2 மகன்கள் உள்ள நடிகை ஜீனத்அமன் 60 வயதில் மறுமணம் Empty 2 மகன்கள் உள்ள நடிகை ஜீனத்அமன் 60 வயதில் மறுமணம்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:08 pm

இந்திப்பட உலகின் முன்னாள் பிரபல நடிகை ஜீனத்அமன். 1970-80ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தார். நடிகை ஜீனத்அமன் தேவ்ஆனந்த், ராஜ்கபூர், பெரோஸ்கான், நாசிர் உசேன், மனோஜ்குமார், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

அவர் நடித்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, யாதோங்கி பாரத் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஜீனத்அமன் புகழ்பெற்று இருந்தபோது நடிகர் சஞ்சய்கானுடன் தொடர்பு இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவர் 1985-ம் ஆண்டு மஸ்கர்கான் என்பவரை திருமணம் செய்தார். அவர் 1998-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் 60 வயதான ஜீனத்அமன் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். விரைவில் அவரது 2-வது திருமணம் நடைபெற உள்ளது. ஜீனத்அமனுக்கு 26 வயதில் அசான் என்ற மகனும், 23 வயதில் ஜகான் என்ற மகளும் உள்ளனர்.

2-வது திருமணம் செய்ய இருப்பது குறித்து 60 வயதான ஜீனத்அமன் கூறியதாவது:-

நான் மீண்டும் திருமணம் செய்ய இருப்பது உண்மைதான். எனது கணவர் இறந்த பிறகு 2 குழந்தைகளுக்காக வாழ்ந்து வந்தேன். மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தது.

தற்போது அந்த சிந்தனை என்னை அச்சமூட்டுகிறது. இதனால் எனது வாழ்க்கையில் ஒரு துணையை தேடி வருகிறேன். அவரை பற்றி நான் அதிகமாக கூற விரும்பவில்லை. அவர் இந்தியாவை சேர்ந்தவர். நாங்கள் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் மீண்டும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன்.

இவ்வாறு ஜீனத்அமன் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந
»  எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான்
» மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- காவ்யா மாதவன்
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» அப்பா இயக்கத்தில் மகன்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum