தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடு மேய்க்க ரொம்பவும் சிரமப்பட்டேன்: கார்த்திகா

Go down

ஆடு மேய்க்க ரொம்பவும் சிரமப்பட்டேன்: கார்த்திகா Empty ஆடு மேய்க்க ரொம்பவும் சிரமப்பட்டேன்: கார்த்திகா

Post  ishwarya Sat Mar 16, 2013 1:51 pm

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. இவர் ‘கோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடியும், கொடி வீரனும்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆடு மேய்க்கும் பெண்ணாக நடித்துள்ள, கார்த்திகா, ஆடு மேய்த்த அனுபவம் குறித்து கூறும்போது,

இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும், ஆடுகளுடன் பழக்கம் இருக்கிறதா என கேட்டனர். ஆனால், நான் ஆடுகளை தொட்டுக்கூட பார்த்தது இல்லை எனக் கூறினேன். இதற்கு பின், ஆடு மேய்க்கும் சிலரை அழைத்து எனக்கு பயிற்சி கொடுத்தனர். ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்துச் செல்வது, விசில் அடித்து, ஆடுகளுக்கு எப்படி சைகை கொடுப்பது என, அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.

இந்த படத்தை பொறுத்தவரை, நடிப்பு பயிற்சி பெற்றதை விட, ஆடு மேய்க்கும் பயிற்சிக்காகதான், ரொம்பவும் சிரமப்பட்டேன். அந்த சிரமத்துக்கு, படம் வெளியானதும், பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum