தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான

Go down

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான Empty இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான

Post  ishwarya Sat Mar 16, 2013 1:38 pm

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அது இயக்குனர் அவதாரம்தான்.

நீண்ட நாட்களாக ஒரு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் அதை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. படத்தை இயக்குவது குறித்து தனது நண்பரான ரசூல் பூக்குட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போதே ஒரு படத்திற்காக கதையை எழுதி முடித்துள்ளார். இந்த கதையை நானும் ஏ.ஆர்.ரகுமானும் பலமுறை கலந்து பேசியுள்ளோம். விரைவில் படத்தை துவங்கவும் உள்ளோம். இப்படத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர், நடிகையர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.ஆர்.ரகுமான் ஒரு சினிமா பிரியர். உலக சினிமாக்களை அதிகம் பார்ப்பவர். சினிமாவைப் பற்றிய நல்ல ஞானம் அவருக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. விரைவில் இவர் இயக்கும் இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum