ஊழலற்ற இந்தியாவை மாணவர்களால் உருவாக்க முடியும்: கல்லூரி விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
Page 1 of 1
ஊழலற்ற இந்தியாவை மாணவர்களால் உருவாக்க முடியும்: கல்லூரி விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் புஷ்பமாலா-2013 நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது. விழாவை கல்லூரி செயலாளர் துளசி அய்யா வாண்டையார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது-
நான் எழுதிய ஓரு பாட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே அந்த பாடலுக்கு கூட 1000 பூக்கள் கிடைக்க வில்லை. 100 பூக்கள் மட்டும் வைத்துதான் படமாக்கப்பட்டது. 1000 தாமரைகள் (மாணவர்கள்) ஓரே இடத்தில் குவிந்து கும்மி கொட்டுவது (கைதட்டுவது) பூண்டி புஷ்பம் கல்லூரியில் தான்.
மேற்கு உலகம் அமெரிக்கா, ஐரோப்பியா என்றும் கிழக்கு உலகம் ஆசியா என்றும் என இரண்டாக பிரிந்து கிடந்தது. ஏனென்றால் மேற்கு உலகம் பெண்ணுக்கு உரிமை கொடுத்து இரட்டை சிறகால் பறக்க ஆரம்பித்தது. எந்த ஒரு பறவையும் இரட்டை சிறகால் பறந்தால் தான் அதன் இலக்கை அடைய முடியும். நம்நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பதவி, கல்வி என்ற ஒற்றை சிறகால் பறந்துகொண்டிருப்பதை முறியடித்து பெண்கள் இரட்டை சிறகால் பறந்து இமயத்தின் உச்சியை தொட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் அடுத்த நூற்றாண்டில் ஆசியாவில் இரண்டே இரண்டு வல்லரசுகள் மட்டும் தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஓன்று சீனா, மற்றொன்று இந்தியா. இதில் சீனாவுக்கு வாய்ப்பு அதிகமா? இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமா? என்று கேட்டால் சீனாவை விட இந்தியாவுக்குதான் வாய்ப்பு அதிகம்.காரணம் சீனாவில் 60 சதவீதம் பேர் முதியவர்கள் 40 சதவீதம் பேர் இளையவர்கள். இந்தியாவில் 60 இளையவர்கள் 40 சதவீதம் முதியவர்கள்.
வாழ்க்கையில் ஒருவன் தன்னை தானே செதுக்கி கொள்ள வேண்டும். மூளையும் உழைப்பும் ஒன்று சேர உழைக்கிறவனே வெற்றி பெறுகிறான். மாணவர்களாகிய உங்களுக்கு வாழ்க்கையில் லட்சியம் வேண்டும். எதை பார்த்தாலும் கேள்வி கேட்க உங்களை உருவாக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் (மாணவர்களே) நேர்மையாக இருக்கிறீர்கள் பொய்சொல்லுவதற்கு கூசுகிறீர்கள். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது பொய்சொல்வதும் நேர்மை குறைவாக இருப்பதும் நான் பார்த்தேன். அந்த பழக்க வழக்கத்தில் நானும் கூட பொய்சொன்னேன். அந்த பொய் யாரையும் தீர்ப்பதற்காக அல்ல, அந்த பொய் யாரையும் கேடுப்பதற்காக அல்ல. ஆனால் அந்த பொய்யிலிருந்து என்னை முற்றிலும் வெளியேற்றினேன்.
உண்மையான வாழ்க்கையில் பொய் வராது. துணிச்சலான வாழ்க்கையில் பொய் வராது, பொய்யற்ற வாழ்க்கை வாழ வேண்டும். ஆசிரியர்களே, பெற்றோர்களே உங்களுக்கு ஒரு வார்த்தை இந்த கள்ள கபட மற்ற மாணவ கண்மணிகளை நீங்கள் சந்தேகப்படாதீர்கள்.
இன்றைய இளையவர்கள் படித்து விட்டு 10 ஆயிரம். 50 ஆயிரம் சம்பளம், கார். வீட்டில் ஏசி, ஒரு குழந்தை இது சராசரி வழ்க்கை. இதைவிட்டு நீங்கள் வரவேண்டும். ஊழற்ற ஒரு இந்தியாவை உங்களால் உருவாக்க முடியும். மாணவ மாணவர்கள் கல்வி படிப்பை முடித்து வாழ்க்கையில் ஒரு ஏணிபடியை ஏற்படுத்திக் கொண்டு பொது வாழ்கைக்கு(அரசிலுக்கு) வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய கவிஞர் என்ற பட்டத்தை பூண்டி புஷ்பம் கல்லூரி செயலாளர் துளசி அய்யாவாண்டையார் வழங்கினார். பூண்டி புஷ்பமாலா 2013 போட்டியில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு செயலாளர் துளசிஅய்யாவாண்டையார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் து.கிருஷ்ண சாமி வாண்டையார், கலைப்புலத் தலைவர் ராஜேந்திரன், அறிவியல் புலத்தலைவர் பால சுப்பிரமணியன், இயக்குனர் காமராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கரிகாலன், தரக்கட்டுப் பாட்டு அலுவலர் உதயகுமார், அலுவலக மேலாளர் துரைராஜ், டாக்டர். வீரையன், ஆசிரியர் நலச்சங்க செயலாளர் சி.சந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியை ஆர்.சாந்தி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவின் கலைமன்ற துணைத்தலைவர் சிவாஜிகபிலன், பேராசிரியை மாலதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வீரசிகாமணி நன்றி கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சுடிதார் பாதுகாப்பு அரணாக உள்ளது: கவிஞர் வைரமுத்து ருசிகர பேச்சு
» தமிழ் படங்களில் ஆபாசம் திணிப்பு: கவிஞர் வைரமுத்து புகார்
» கவிஞர் வைரமுத்து பாடகரானார்
» ‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து
» ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்! – கவிஞர் வைரமுத்து
» தமிழ் படங்களில் ஆபாசம் திணிப்பு: கவிஞர் வைரமுத்து புகார்
» கவிஞர் வைரமுத்து பாடகரானார்
» ‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து
» ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்! – கவிஞர் வைரமுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum