தமிழ் படங்களில் ஆபாசம் திணிப்பு: கவிஞர் வைரமுத்து புகார்
Page 1 of 1

சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தென் மேற்கு பருவக்காற்று. விஜய் சேதுபதி, வசுந்தரா சியேட்ரா ஜோடியாக நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து இப்படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இப்பட விழாவில் வைர முத்து பங்கேற்று பேசியதாவது:-
தமிழ் புவியியல் சார்ந்த படம் தென் மேற்கு பருவக்காற்று. படம் பார்த்து விட்டு என்னால் பேச முடியவில்லை. நான் மட்டு மல்ல இதை பார்க்கும் எல்லோருக்கும் இருதயம் உடைந்து கண்ணீர் வெளியே வரும்.
மனிதனின் உணவு, பழக்கம், உடை போன்றவை மாறலாம். ஆனால் எப்போதும் மனித குலத்திடம் மாறாமல் இருப்பது தாய் பாச உணர்வு ஒன்றுதான். அதனை இந்த படத்தில் கொட்டி காட்டியுள்ளனர்.
தமிழன் கண்டு பிடித்த முதல் சைவ செருப்பு ஆவாரம் இலை. வெயில் மணலில் அந்த இலையை செருப்பாக்கி நான் நடந்து இருக்கிறேன். உப்பு இல்லை என்றால் உணவில் தும்பை செடியை பிடுங்கி போடுவர், உப்பு சுவை வந்து விடும். தமிழர்களின் இத்தகைய பழைய வாழ்க்கை முறை இந்த படத்தில் கண்முன் நிறுத்தப்படுகிறது. வசனங்கள் இயல்பாக உள்ளன. பாடல்களை இசை அமுக்கவில்லை. மைக்கேல்ஜாக்சன் ஆட்டம் போடுவதற்கு வசதியாக சில சில இசையை உருவாக்கி வைத்திருந்தார். அதை தமிழ் இசையில் காப்பியடித்து கொண்டு வந்து விட்டனர். தாலாட்டு பாட்டை டான்ஸ் ஆடிக் கொண்டு பாடலாமா? சமூகத்தின் குரலுக்கு தான் தாளம் போட வேண்டும்.
பாலும் பழமும், பாசமலர் படத்துக்கு பிறகு முழுமையாக கேட்கும் பாடலாக இந்த படத்தின் பாடல்கள் அமைந்துள்ளன.
படங்களில் பாலுறவை திணிக்கிறார்கள். பாலுறவு பக்தி மாதிரி, நெஞ்சுக்குள் வைத்திருக்க வேண்டும் வெளியே காட்டக் கூடாது. தேவையில்லாமல் பாலுறவு திணிக்கப்படுகிறது. தென் மேற்கு பருவக்காற்று படத்தில் துளியும் ஆபாசம் இல்லை.
இவ்வாறு வைரமுத்து பேசினார். தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், கேப்டன் ஷபுஐசக், நடிகை சரண்யா இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கவிஞர் வைரமுத்து பாடகரானார்
» ‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து
» 133 அதிகாரங்களோடு புது குறள் எழுத ஆசை: கவிஞர் வைரமுத்து
» ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்! – கவிஞர் வைரமுத்து
» ஊழலற்ற இந்தியாவை மாணவர்களால் உருவாக்க முடியும்: கல்லூரி விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum