தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழு! வாழ விடு!: இளம் நடிகருக்கு அஜீத் வழங்கிய ஆலோசனை

Go down

 வாழு! வாழ விடு!: இளம் நடிகருக்கு அஜீத் வழங்கிய ஆலோசனை Empty வாழு! வாழ விடு!: இளம் நடிகருக்கு அஜீத் வழங்கிய ஆலோசனை

Post  ishwarya Sat Mar 16, 2013 12:54 pm

நடிகர் அஜீத், சமீபகாலமாக இளம் நடிகர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்து ஊக்கமூட்டி வருகிறார். மங்காத்தா படத்தில் மகத், பிரேம்ஜி அமரன், வைபவ் போன்றோருடன் நடித்து தான் ஒரு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை தகர்த்தெறிந்தவர்.

அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க விருக்கிறார். விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துடன் பாலா, விதார்த், முனீஸ், சுகைல் போன்ற இளம் நடிகர்களும் நடிக்கிறார்கள். இவர்களில் முனீஸ் சமீபத்தில் அஜீத்தை சந்தித்து இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றாராம். அப்போது அஜீத் முனீஸ்-க்கு சில உபயோகமான ஆலோசனைகளை வழங்கினாராம். அதாவது,

கடுமையாக உழைக்கவும். நாணயமாக வரி கட்டவும். குடும்பத்தை, குறிப்பாக மூத்தவர்களை மதித்து நடப்பதுடன அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும். வருமானத்திலிருந்து ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அடுத்தவர்கள் வாழ்வில் உன் கருத்தை திணிக்காதே. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க விடாதே. நீ யாருடன் பணிபுரிய வேண்டும் என்று வெறும் பணத்தை நிர்ணயிக்க விடாதே. வாழு வாழ விடு. இது என்னுடைய அறிவுரை அல்ல, என் வாழ்கை எனக்கு கற்று கொடுத்த அனுபவம் என்று புன்னகையோடு ஆலோசனைகளை வழங்கினாராம்.

அஜீத்தின் இந்த ஆலோசனை தன் திரை பயணத்தில் மட்டுமின்றி தன் வாழ்க்கையிலும் நிச்சயம் உதவும். அஜீத் உடனான சந்திப்பை என் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாது என முனீஸ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum