தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துள்ளது: நடிகை நதியா

Go down

சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துள்ளது: நடிகை நதியா Empty சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துள்ளது: நடிகை நதியா

Post  ishwarya Sat Mar 16, 2013 12:48 pm

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய நடிகை நதியா ‘எம் குமரன் சன் ஆப் மகாலெட்சுமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் மறுபடியும் முழுநேர நடிகையாகிவிட்டார். தற்போது, தெலுங்கு படமொன்றில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் நதியா அளித்த பேட்டி வருமாறு:-

திருமணம் முடிந்ததும் கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன். 16 வயது மற்றும் 12 வயதில் இருமகன்களும், மகளும் உள்ளனர். திருமணத்துக்கு முன்பு நான்கு ஆண்டுகள்தான் நடித்தேன். முன்னணி நடிகையாக இருந்தபோதே அதை விட்டு விலகினேன். இப்போது குழந்தைகள் பெரியவர்களாகி விட்டதால் குடும்பத்தோடு மும்பை வந்து செட்டில் ஆகிவிட்டேன்.

தெலுங்கில் பிரபாஸ் அம்மாவாக நடித்த படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது பவன் கல்யாண் படத்தில் சமந்தாவின் அம்மாவாக நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களின் கதைகளை கணவரும் மகன்களும் தேர்வு செய்கிறார்கள். மகன்கள் சம்மதிக்கும் படத்தில் மட்டுமே நடக்கிறேன். அவர்களுக்கு பிடிக்காத நிறைய படங்களை நிராகரித்து உள்ளேன்.

சினிமாவில் ஆணாதிக்கம் நிறைய உள்ளது. நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தே கதைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் நானோ எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க சம்மதிப்பது இல்லை. கேரக்டர் நன்றாக இருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.

சூட்டிங் போகும்போது வீட்டில் குழந்தைகளுக்கான உணவுகளை சமைத்து வைத்து விட்டுத்தான் போகிறேன். அவர்கள் சூடுபண்ணி சாப்பிடுகிறார்கள். வெளியூர் படப்பிடிப்பில் இருந்தாலும் அடிக்கடி போனில் பேசுகிறேன். நான் வீட்டில் இல்லாதபோது குழந்தைகள் தங்கள் வேலைகளை அவர்களே செய்கிறார்கள். இதனால் பொறுப்பு வருகிறது. கணவர் குழந்தைகள் ஒத்துழைப்பு இருப்பதால் தான் மீண்டும் நடிக்க வந்தேன். என் அழகுக்கு மனம்தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» தமிழ் சினிமாவில் குஜராத் நடிகை!
» நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
» யார் ஆதரவும் இல்லாமல் சினிமாவில் சொந்த காலில் வளர்ந்துள்ளேன்: நடிகை அசின்
» யார் ஆதரவும் இல்லாமல் சினிமாவில் சொந்த காலில் வளர்ந்துள்ளேன்: நடிகை அசின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum