தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்காயத் துவையல்

Go down

வெங்காயத் துவையல்                              Empty வெங்காயத் துவையல்

Post  ishwarya Fri Mar 15, 2013 2:25 pm

தேவையான பொருட்கள்.....

வெங்காயம் - 2
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2
புளி - கோலிகுண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/ 2 ஸ்பூன்

செய்முறை...

* அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, புளி, மிளகாயை சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின் அதை ஒரு தட்டில் கொட்டி விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிக் வைத்துக் கொள்ளவும்.

* மிக்சியில் வதக்கிய உளுந்தம் பருப்பு, புளி, மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* பின்னர் அதில் வெங்காயத்தையும் சேர்த்து அரைக்கவும். பின் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் வெங்காயத் துவையல் தயார்.

* செய்ய எளிதானது, சுவையும் அருமையாக இருக்கும். தாளித்து சாப்பிட விரும்பினால் தாளித்துப் பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum