தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலப்பு துவையல்

Go down

கலப்பு துவையல் Empty கலப்பு துவையல்

Post  ishwarya Tue Feb 19, 2013 6:05 pm

வெங்காயம் - 2
*தக்காளி - 2
*தேங்காய் - 2 பத்தை
*கடலைப் பருப்பு - 1/4 கப்
*உளுந்தப் பருப்பு - 1/4 கப்
*புளி
*காய்ந்த மிளகாய் - 4
*கருவேப்பிலை, கொத்துமல்லி
*உப்பு

*அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு மற்றும் உளுந்தப் பருப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

*அதனை தட்டில் கொட்டிக் கொண்டு பின்னர் அதிலேயே பெரிது பெரிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

*அதையும் தட்டில் வைத்துக் கொண்டு அரைப்பதற்கு ஏற்ற வகையிலான தேங்காயையும் வதக்கிக் கொள்ளவும்.

*அதை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு 4 மிளகாய்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

*பின்னர் மிக்சி அல்லது அம்மியில் முதலில் தேங்காயை அரைக்கவும்.

*அதில் வறுத்து வைத்திருக்கும் பருப்புகளையும் கொட்டி அரைக்கவும். அதன் பின்னர் தக்காளி, வெங்காய வதக்கல்கள், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், புளி, உப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லிகளைப் போட்டு அரைத்து எடுக்கவும்.

*இதனை துவையலாகவும் பயன்படுத்தலாம். இட்லி, தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum