தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொண்டைக்கடலை சாலட்

Go down

கொண்டைக்கடலை சாலட்                                Empty கொண்டைக்கடலை சாலட்

Post  ishwarya Fri Mar 15, 2013 11:38 am

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2 (சதுர சதுரமாக, மெலிதாக கட் செய்து கொள்ளவும்) மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கேரட் - 1
சாட் மசாலா - 1 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை நன்கு கழுவி துருவிக் கொள்ளவும்.

• வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு வேக வைக்கவும்.

• நறுக்கிய உருளைகிழங்கை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• உருளைக்கிழங்குடன் வெந்த கடலை, வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum