கொண்டைக்கடலை புலாவ்
Page 1 of 1
கொண்டைக்கடலை புலாவ்
வேலைக்கு செல்பவர்கள் அனைவருமே, மிகவும் எளிதாகவும், சுவையுடனும் சமைத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அதிலும் கலவை சாதமாக இருந்தால், மிகவும் ஈஸியாக இருக்கும். ஆகவே அத்தகையவர்களுக்கு மிகவும் ஈஸியாக சமைக்கும் வகையில் ஒரு புலாவ் செய்வோம். அது என்ன புலாவ் என்றால், கொண்டைக்கடலை புலாவ். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 6
கிராம்பு - 5
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 1
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புலாவ் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்தாக வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, மிளகாய் தூள் மற்றும் புலாவ் மசாலா சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் பாசுமதி அரிசியை கழுவி அதோடு சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கொண்டைக்கடலை புலாவ் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொண்டைக்கடலை சுண்டல்
» கொண்டைக்கடலை குழம்பு
» கொண்டைக்கடலை - கத்தரிக்காய் மசாலா
» கொண்டைக்கடலை சாலட்
» கார்ன்- கொண்டைக்கடலை கட்லெட்
» கொண்டைக்கடலை குழம்பு
» கொண்டைக்கடலை - கத்தரிக்காய் மசாலா
» கொண்டைக்கடலை சாலட்
» கார்ன்- கொண்டைக்கடலை கட்லெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum