குழந்தைகளுக்கான மூலிகை மாத்திரை
Page 1 of 1
குழந்தைகளுக்கான மூலிகை மாத்திரை
தேவையான பொருள்கள்:
தேவதாரம் = 20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் = 20 கிராம்
அதிவிடயம் = 20 கிராம்
வசம்பு = 20 கிராம்
கோரைக்கிழங்கு = 20 கிராம்
அதிமதுரம் = 20 கிராம்
கடுக்காய் = 20 கிராம்
பொடுதலை = 500 கிராம்
இளநீர் = 200 மி.லி
பசும்பால் = 200 மி.லி
தேன்
செய்முறை:
தேவதாரத்தை இடித்து கொள்ளவும். கஸ்தூரி மஞ்சளை ஒன்றிரண்டாக தட்டி ஒரு மண் பானையில் போட்டு 100 மி.லி பசும்பாலை ஊற்றி அடுப்பில் வைத்து பால் சுண்டும் அளவுக்கு எரித்து இறக்கி மஞ்சளை ஆற விட்டு இடித்து கொள்ளவும்.
அதிவிடயத்தை இடித்து கொள்ளவும்.
வசம்பை தட்டி ஒரு மண் பானையில் போட்டு 100 மி.லி இளநீரும், 100 மி.லி பசும்பாலும் விட்டு 2 மணி நேரம் ஊற வைத்து பின்பு அடுப்பில் கொதி வந்ததும் இறக்கி வசம்பை நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
கோரைக்கிழங்கை கழுவி உலர்த்தி இடித்து கொள்ளவும்.
அதிமதுரத்தை தட்டி இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.
குறிப்பிட்டுள்ள அளவுக்கு கூடுதலாக கடுக்காயை எடுத்து தட்டி தோலை எடுக்கவும். இலேசாக இடித்து ஒரு மண் பானையில் போட்டு 100 மி.லி இளநீர் விட்டு அடுப்பில் வைத்து இளநீர் சுண்டும் அளவுக்கு எரித்து இறக்கி நிழலில் உலர்த்தி மீண்டும் இடிக்கவும். பிறகு மெல்லிய துணியில் சலித்து கொள்ளவும்.
இடித்து வைத்துள்ள மூலிகைகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒரு முறை இடித்து கொள்ளவும்.
பொடுதலையை புதிதாக கொண்டு வந்து இடித்து அதன் சாற்றை பீங்கான் பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
சலித்து வைத்த மூலிகைகளை உரலில் போட்டு பொடுதலை சாற்றை சிறுக சிறுக ஊற்றி அரைத்து மெழுகு பதத்தில் வந்ததும் குண்டுமணி அளவில் உருண்டைகளாக உருட்டி மண் தட்டின் மேல் வைத்து நிழலில் காய வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
காலை அரை மாத்திரைகளை தேனில் குழைத்து கொடுக்க வேண்டும். மாலை அரை மாத்திரை தேனில் குழைத்து கொடுக்க வேண்டும். இவ்விதம் 8 நாட்கள் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் குறையும். தோஷங்களால் ஏற்படும் அனைத்து நோய்களும் குறையும்.
குறிப்பு:
தாய்ப்பால் கொடுக்கும் தாய், குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து வரும் நாட்களில் மாமிச உணவுகளையும், கிழங்கு, கடலை வகைகள், எண்ணெய் பண்டங்கள் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. இத்துடன் தாயும் காலை 2 மாத்திரை மாலை 2 மாத்திரை தேனில் குழைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
» குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
» மூலிகை மாத்திரை
» மூலிகை மாத்திரை
» மூலிகை மாத்திரை
» குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
» மூலிகை மாத்திரை
» மூலிகை மாத்திரை
» மூலிகை மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum