சூதக கட்டிற்கு இளகல்
Page 1 of 1
சூதக கட்டிற்கு இளகல்
அறிகுறிகள்:
மாதவிடாய் ஒழுங்காக வராமல் இருத்தல்.
தேவையான பொருள்கள்:
மிளகு = 100 கிராம்
கருஞ்சீரகம் = 100 கிராம்
சிவனார் வேம்பு = 25 கிராம்
சதகுப்பை = 25 கிராம்
சுக்கு = 25 கிராம்
அதிமதுரம் = 25 கிராம்
வெல்லம் = 300 கிராம்
தேன் = 300 கிராம்
செய்முறை:
மிளகை இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும். கருஞ்சீரகத்தை தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சிவனார் வேம்பை ஒன்றிரண்டாக இடித்து மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக உடைத்து மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை விட்டு வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
சதகுப்பையை மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி இடித்து கொள்ளவும். அதிமதுரத்தை இடித்து கொள்ளவும்.
மீண்டும் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
ஒரு மண் பானையில் 50 மி.லி பசும்பால் விட்டு வெல்லத்தை இடித்து போட்டு 5 நிமிடம் கழித்து சலித்து வைத்த தூளை கொட்டி கிளறி விட்டு தேனை ஊற்றி கிண்டி இளகல் பதத்தில் வரும் போது இறக்கி ஆற வைத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவிற்கு 1 மணி நேரம் முன் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்க வேண்டும். மாலை 6 மணி அளவில் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவும். இவ்வாறு 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சூதக கட்டு குறையும்.
குறிப்பு:
இந்த மருந்து சாப்பிடும் போது இளநீர், தயிர், பழஞ்சோறு, இறைச்சி, கிழங்கு வகைகள் மற்றும் கடலை வைகள் ஆகியவற்றை நீக்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum