கனடாவில் தியாகராஜ ஆராதனை விழா
Page 1 of 1
கனடாவில் தியாகராஜ ஆராதனை விழா
கல்கேரி : கனடாவின் கல்கேரி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தின் 25வது ஆண்டு விழாவுடன் 30வது தியாகராஜ ஆராதனை விழாவும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் மே 28ம் தேதியன்று மாலை விஜயா சிவாவின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் ஆர்.கே.ஸ்ரீராம் குமாரின் வயலின் இசையும், ஜெ.வைத்தியநாதனின் மிருதங்க இசையும் பக்கவாத்தியங்களாக அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்கேரி ராகமாலா இசை குழுவினர் செய்திருந்தனர்.
மே 29ம் தேதியன்று உள்ளூர் இசை கலைஞர்களின் மந்திர பாராயணங்கள் அடங்கிய ஆராதனை, ராமபிரானுக்கு சிறப்பு பூஜை ஆகியன நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் திவ்யநாம கீர்த்தனைகள் ஆகியன இசைக்கப்பட்டு, மங்கலத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு இசையமுது பருகினர். விழாவில் நடனங்கள் ஆடியும், பாடல்கள் பாடியும் தியாகராஜருக்கு ஆராதனை செய்த குழந்தைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கர்நாடக இசை கலைஞர் அஸ்வின் ஐயர், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன் தியாகராஜரின் அரிய கீர்த்தனைகள் இரண்டினையும் பாடினார். விழாவின் சிறப்பம்சமாக ஜூன் 27ம் தேதியன்று பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» தியாகராஜ சேகரம் என்னும் ஜோதிட நூல்
» கனடாவில் கச்சேரி… கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி!
» கனடாவில் செப்-29ல் ஆதிபகவன் ஆடியோ ரிலீஸ்
» தீப ஆராதனை ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum