தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேழ்வரகு களி

Go down

கேழ்வரகு களி                   Empty கேழ்வரகு களி

Post  ishwarya Thu Mar 14, 2013 5:21 pm

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு-ஒரு கப்
உப்பு-தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்-ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்-1
கறிவேப்பிலை

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய்விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

* ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

* எல்லா மாவையும் கொட்டியபிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும்வரை விடாமல் கிண்டிவிட வேண்டும்.

* நன்றாக வெந்து, வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

* இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum