நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை
Page 1 of 1

சென்னை : ‘நீர்ப்பறவை’ படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக, செண்பகமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் தயாரித்து வெளியிட்ட, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘நீர்ப்பறவை’ என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டோம்.
இதற்கும் கேளிக்கை வரி விலக்கு கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் உள்நோக்கத்துடன், எங்கள் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. இது சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். நீர்ப்பறவை வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கேளிக்கை வரி வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி சுதாகர் விசாரித்து, ‘நீர்ப்பறவை’ படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் ராமன்லால் ஆஜரானார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும்: கமல்ஹாசன்
» விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட இடைக்கால தடை!
» நீர்ப்பறவை
» நீர்ப்பறவை ஆடியோ விழா
» இடைக்காலத் தடை - எரிச்சலில் துப்பாக்கி டீம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum