நீர்ப்பறவை ஆடியோ விழா
Page 1 of 1
நீர்ப்பறவை ஆடியோ விழா
நேற்று மாலை சத்யம் காம்ப்ளக்சில் நீர்ப்பறவை படத்தின் இசை வெளியீட்டு விழா. படத்தின் நாயகன் விஷ்ணு, நாயகிகள் சுனேனா, மனோ சரித்ரா என்று அனைவரும் ஆஜர். கெஸ்ட் வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ், சுசீந்திரன், விஜய் சேதுபதி, சாந்தனு, பிருத்வி, தமிழச்சி தங்கபாண்டியன், அழகம்பெருமாள், பாண்டிராஜ், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் இவர்களுடன் பாலுமகேந்திரா.
தென்மேற்குப் பருவக்காற்று படம் தந்த தெம்பில் நம்பிக்கை சொட்ட விழுந்தன இயக்குனர் சீனு ராமசாமியின் வார்த்தைகள். முக்கியமாக விஷ்ணுக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என்றார் அதீத நம்பிக்கையுடன்.
விழாவில் பலரும் பேசினாலும் ஹைலைட்டாக அமைந்தது வைரமுத்துவின் பேச்சு. தென்மேற்குப் பருவக்காற்றுக்கு ஏறக்குறைய ஒரு மக்கள் தொடர்பாளர் போல பணியாற்றியிருந்தார் கவிப்போரசு. நேற்று அந்தப் பணியை மீண்டும் புதுப்பித்தது போலிருந்தது அவரது பேச்சு.
இலங்கை கடலுக்குள் படகில் சுடப்பட்டு கிடக்கும் ஒரு சடலத்தின் அருகில் வீறிட்டு அழும் குழந்தை கடலிலேயே அனாதையாகிறது என்று படத்தின் மையத்தை கீறி காட்டினார். இலங்கையிலிருந்து வருகிறவர்களை அகதி என்று சொல்லாதீர்கள் அதிதி - விருந்தாளி - என்று சொல்லுங்கள் என்றார்.
விழாவில் படத்தின் ட்ரெய்லரும், ஒரு பாடல் காட்சியும் திரையிடப்பட்டது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும், ரகுநந்தனின் இசையும் நீர்ப்பறவை மீதான எதிர்பார்ப்பை சற்று கூட்டியது எனலாம். படத்தின் இசை தட்டை ஹாரிஸும், முருகதாஸும் இணைந்து வெளியிட்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா
» ஏ.ஆர்.முருகதாசின் திமிர்? – அசர வைத்த ஆடியோ விழா
» தங்க மீன்கள் ஆடியோ வெளியீட்டு விழா
» கும்கி ஆடியோ விழா - அண்ணன் கமலும் தம்பி ரஜினியும்
» நீர்ப்பறவை
» ஏ.ஆர்.முருகதாசின் திமிர்? – அசர வைத்த ஆடியோ விழா
» தங்க மீன்கள் ஆடியோ வெளியீட்டு விழா
» கும்கி ஆடியோ விழா - அண்ணன் கமலும் தம்பி ரஜினியும்
» நீர்ப்பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum