தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 ஹாட் கிசுகிசுக்கள்

Go down

2013 ஹாட் கிசுகிசுக்கள்  Empty 2013 ஹாட் கிசுகிசுக்கள்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:45 pm

இங்குள்ள எந்தச் செய்தியுமே ‘திடீரென்று’ முளைத்தவை அல்ல. அனைத்துமே கடந்த ஆண்டுகளோடு தொடர்புடையதுதான் என்பதை மறக்கக்கூடாது. தவிர, ஒவ்வொரு மொழி திரைத்துறைக்கும் ஓர் இயங்கியல் உண்டு. விதி உண்டு. அதற்கு ஏற்பத்தான் அந்தந்த சினிமா உலகம் இயங்குகிறது; இயங்கவும் போகிறது. இந்த சூத்திரத்தின் அடிப்படையிலேயே இனி வரும் மூன்று பக்கங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

என்றாலும் நூறு சதவிகிதம் இப்படித்தான் நடக்கும் என எந்த விஷயத்தையும் சொல்ல முடியாது. அனைத்துமே ‘லாம்’ கணக்குடன் முடிவடைய வேண்டிய ஒன்றுதான்.
இந்த முன்னுரையை மனதில் கொண்டு தொடர‘லாமா?’

கூப்பிடும் தொலைவில் ஆந்திர - கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல்கள் நின்று கொண்டிருக்கின்றன. அம்பயர் விசில் ஊத வேண்டியதுதான் பாக்கி. பாய்ச்சல் ஆரம்பமாகிவிடும். இது வெறும் ‘அரசியல்’ நியூஸ் அல்ல. ‘சினிமா’ செய்தியும் கூட. காரணம், இரு மாநில திரைத்துறையும், அந்தந்த மாநில அரசியலுடன் பின்னிப் பிணைந்தவை. நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை; தயாரிப்பாளர்களில் தொடங்கி திரையரங்க உரிமையாளர் வரை அனைவரிடமும் ஏதேனும் ஒரு கட்சியின் உறுப்பினர் அட்டை உண்டு.

எனவே தேர்தல் கால பரபரப்பு, தெலுங்கு - கன்னட சினிமாவிலும் நிச்சயம் எதிரொலிக்கும். அதற்கான மணியோசை இப்பொழுதே கேட்க ஆரம்பித்துவிட்டன.
தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள்தான் தெலுங்கு சினிமாவையே ஆட்டிப் படைக்கின்றன. இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த பெரும் தலைகளின் முதலீடுதான் தொடர்ந்து அங்கு படங்கள் தயாரிக்கப்பட காரணம்.

ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா ஆகியோர் தெலுங்கு தேச பிரதிநிதிகள் என்றால் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோர் காங்கிரஸின் தளபதிகள். மகேஷ்பாபு வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சியுடன் அவர் குடும்பத்துக்கு இருக்கும் தொடர்பு அனைவரும் அறிந்ததுதான். இதே கதைதான் நாகார்ஜுனா, வெங்கடேஷ் விஷயத்திலும்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு வெளிப்படையாக நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், இவரது நட்பு வட்டத்தில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். எனவே தேர்தல் சமயத்தில் ஒரு நட்சத்திரம் இன்னொருவரை பழி வாங்குவதற்காக கட்சியை பயன்படுத்திக் கொள்வார்கள். எக்குத்தப்பான செல்ஃபோன் வீடியோ, ‘லீக்’ ஆகும். நெருங்கிய டிரைவர் அல்லது சிகை அலங்கார நிபுணரை விலைக்கு வாங்கி ‘அவர் ஒரு குடிகாரர், பெண் பித்து பிடித்தவர்...’ என்றெல்லாம் பேட்டி தர வைப்பார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அப்படித்தான் ஜூனியர் என்டிஆரின் பெயர் அடிபட்டது. ‘இலியானா இணங்காததால் வேண்டுமென்றே அவர் முகத்தின் மீது இவர் புகைவிட்டார்... குடிக்காமல் நடிக்க வரமாட்டார்... டான்ஸ் ஆட மாட்டார்...’ என்றெல்லாம் முன்னாள் டிரைவர் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மொத்தத்தில் இந்த சதுரங்க விளையாட்டால் வெட்டுப்படப் போவது பாவப்பட்ட நடிகைகள்தான்.

கிட்டத்தட்ட இதே நிலைதான் கன்னட திரையுலகிலும். அசைக்க முடியாத சக்தியாக வீற்றிருக்கும் ராஜ்குமார் குடும்பம், நிச்சயம் தங்களுக்கு சாதகமான அரசுதான் அமைய வேண்டும் என காய்களை நகர்த்தும். இதிலிருந்து தப்பிக்க சுதீப் தலைமையிலான இளம் பட்டாளம் முயலும். மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆகியவை இந்த ஆடு புலி ஆட்டத்தை அறுவடை செய்ய மும்முரமாக வண்டி கட்டும். இதன் விளைவாக பல நட்சத்திர தம்பதிகள் ‘விவாகரத்து’ செய்வதாக அறிவிப்பார்கள். புதிதாக பலர் ‘காதலிக்கத்’ தொடங்குவார்கள். திருமணமான நடிகருக்கு இளம் நடிகையுடன் ‘தொடர்பு’ இருப்பதாக வதந்தி பரவும். சூட்கேஸ் கைமாறும் அளவை பொருத்து சம்பந்தப்பட்ட நடிகையே ‘புகைப்பட ஆதாரத்துடன்’ செய்தியாளர்களை தொடர்பு கொள்வார்.

ஏற்கனவே நடிகை பூஜா காந்தியின் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது அல்லது நிறுத்தப்பட்டது. இதற்கு பின்னால் ஒரு பிராந்திய கட்சிதான் இருக்கிறது என்கிறார்கள். நடிகர் தர்ஷனின் தனிப்பட்ட வாழ்க்கை அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறது. அதன் இறுதி முடிவு வரும் காலத்தில் தெரிந்து விடும். அரசியல் காரணங்களுக்காக எழும் சர்ச்சைகளும் வதந்திகளும் இப்படியென்றால் பாதுகாப்பு கருதி அல்லது வல்லூறுகளிடமிருந்து தப்பிக்க அல்லது கேரியரில் முன்னேற அல்லது பாங்க் பேலன்ஸை உயர்த்த சில ‘காதல்கள்’ இன்ஸ்டண்ட் ஆக ஜனிக்கும்.

அப்படித்தான் காஜல் அகர்வால் குண்டை வீசியிருக்கிறார்... அது வெடிப்பதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. சென்ற ஆண்டு இறுதியில் தெலுங்கு மீடியாக்களிடம் பேசிய அவர், ‘அதெப்படி இளம் நடிகரான ராமுடன் திருமணம் செய்து கொள்ளாமல் நான் வாழ்வதாக நீங்கள் எழுதலாம்?’ என சீறியிருக்கிறார்.
கேட்ட நிருபர்களின் முகத்தில் ஈயாடவில்லை. காரணம், எந்தப் பத்திரிகையிலும் அல்லது இணையதளத்திலும் அப்படியொரு செய்தி வரவேயில்லை! அது மட்டுமல்ல, அனைத்து நிருபர்களுக்குமே அது ஸ்கூப் நியூஸ்! பிறகு காஜலின் பிஆர்ஓ அனைத்து செய்தியாளர்களிடமும் கெஞ்சி இந்த நியூஸ் வராமல் பார்த்துக் கொண்டது தனிக்கதை. ஆனால், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காக காஜல் அகர்வாலே ஏன் இதை சொல்ல வேண்டும் என அனைவரும் மண்டையை குடைந்துக் கொண்டிருக்கிறார்கள். ‘பல்பு’ எப்போது வேண்டுமானாலும் எரியலாம்.

இதே வேலையைத்தான் சமந்தாவும் செய்திருக்கிறார். ‘ஒருவரை நான் மனதார காதலிப்பது உண்மை. ஆனால், இப்போதைக்கு இருவரும் அதை ரகசியமாக வைத்திருக்கிறோம். எனவே மேற்கொண்டு எதையும் கேட்காதீர்கள். ஆனால், தொடர்ந்து படங்களில் நடிப்பேன்’ என சுந்தரத் தெலுங்கில் திருவாய் மலர்ந்திருக்கிறார். போதாதா? அவரா... இவரா என ஆராய்ச்சி இந்த ஆண்டு முழுக்க தொடரும். பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்கள் அடிபடும்.

தமன்னா, இப்படி எதுவும் சொல்லவில்லைதான். ஆனால், அவருக்கும் சேர்த்து ஹிருத்திக் ரோஷன் கொளுத்திப் போட்டிருக்கிறார். ‘பர்ஃபி பொம்மை மாதிரி அழகாக இருக்கிறார்’ என தமன்னா குறித்து ஹிருத்திக் தெரிவித்திருக்கும் கருத்து, நிச்சயம் மீடியாக்களுக்கு தீனி போடும் விஷயம்தான். பாலிவுட்டில் ஆட்சி செய்ய வேறு தமன்னா முயற்சி செய்கிறாரா... ஆட்டம் களை கட்டும்.

தன் முன்னாள் காதலரான ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க தீபிகா படுகோனே ஒப்புக் கொண்டிருப்பதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸ் கிசுகிசுக்கு விதை போட்டிருக்கிறார். நிச்சயம் கேத்ரினா கைஃப் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார் என்பதால் கவர் ஸ்டோரி எழுத இப்பொழுதே இந்திப் பத்திரிகைகள் தயாராகிவிட்டன.
ஒருவகையில் இதே கேட்டகிரியில்தான் பிரபுதேவாவும், ஸ்ருதிஹாசனும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கும் மம்தா மோகன்தாஸ், மலையாள திரையுலகில் இப்போது டாப் மோஸ்ட் நடிகையாக இருக்கிறார். ஏற்கனவே சில நடிகர்களுடன் இணைத்து புகை வர ஆரம்பித்துவிட்டது. இனி, அது கொழுந்துவிட்டு எரியும். அனைத்துக்கும் மேல் இருக்கவே இருக்கிறார்கள் நயன்தாராவும், அமலாபாலும்.
பிறகு புகைப்பட கலைஞருடன் கிசுகிசுக்கப்படும் ரிச்சா கங்கோபாத்யாயா, த்ரிஷா - ராணா, வரலட்சுமி - விஷால்... என நீளும் பட்டியலில் பெரிதாக மாற்றம் இருக்காது.

மொத்தத்தில் பிரசுரமாகும் ஒவ்வொரு கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின்னாலும் ஒரு அரசியல், பொருளாதார காரணம் மறைந்திருக்கிறது என்பது மட்டும் வழக்கம் போல் வெளிச்சத்துக்கு வராது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “என்னைப் பத்தி கிசுகிசுக்கள் வர்றது கல்யாணத்துக்கு முன்னேன்னா ஓகே… இப்போ கல்யாணம் முடிஞ்சி என் கணவருடன் சந்தோஷமாக பெங்களூரில் குடித்தனம் நடித்தும் போதும் கிசுகிசுக்கள் வந்தா எப்படி?” என்று சிணுங்குகிறார் நடிகை மீனா. பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தி
»  மறந்தேன் மன்னித்தேன் கிசுகிசுக்கள்
» கலகலப்பு ஹாட் சேல்
» கலகலப்பு ஹாட் சேல்
»  அஜித் ஹாட் அண்ட் கோல்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum