தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தென்னிந்திய படங்களை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் மட்டும் கவனமா? : இலியானா பேட்டி

Go down

தென்னிந்திய படங்களை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் மட்டும் கவனமா? : இலியானா பேட்டி  Empty தென்னிந்திய படங்களை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் மட்டும் கவனமா? : இலியானா பேட்டி

Post  ishwarya Wed Mar 13, 2013 5:07 pm

இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறாரா என்பதற்கு பதில் அளித்தார் இலியானா. அவர் கூறியதாவது: தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை கைவிட்டு பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பதாக என்னைப்பற்றி தகவல் வெளியாகிறது. இது வெறும் வதந்திதான். 8 வருடத்துக்கு முன் திரையுலக வாழ்க்கையை தெலுங்கு படத்தில்தான் தொடங்கினேன். எனக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இந்தியில் சாஹித் கபூருடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். ‘தென்னிந்திய படங்கள் கைவசம் இல்லையே?’ என்கின்றனர். தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். விரைவில் நடிப்பேன்.

தெலுங்கு, இந்தி இரண்டுமே எனக்கு முக்கியம். இருமொழி படங்களிலும் சமமாக நடிப்பேன். சமீபத்தில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதுதான். ‘ராக்கி’ என்ற படத்தில் நான் பத்திரிகை நிருபராக நடித்திருந்தேன். இதில் நீதிக்காக மக்களுடன் சேர்ந்து போராடுவதுபோல் நடித்திருந்தேன். நிஜவாழ்க்கையிலும் பெண்கள் தவறுகளை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. அதுவும் பெண்களுக்கு இழைக்கப்படும் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நடக்கும்போது துணிச்சலுடன் போராட வேண்டும். பெண்கள்பற்றிய சமுதாயத்தின் கண்ணோட்டம் மாற வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டால்தான் இந்த மாற்றம் வரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum