தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரிய ஹீரோக்கள் படங்களை ஏற்பதில்லையா? : இமான் பதில்

Go down

பெரிய ஹீரோக்கள் படங்களை ஏற்பதில்லையா? : இமான் பதில்  Empty பெரிய ஹீரோக்கள் படங்களை ஏற்பதில்லையா? : இமான் பதில்

Post  ishwarya Wed Mar 13, 2013 2:17 pm

பெரிய ஹீரோக்கள் படங் களை ஏற்பதில்லையா’ என்பதற்கு பதில் அளித்தார் டி.இமான். ‘தமிழன்’, ‘மைனா’, ‘மனம்கொத்திப் பறவை’, ‘கும்கி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் டி.இமான். அவர் கூறியதாவது: பள்ளிப் பருவத்திலேயே இசையில் எனக்கு அதிக ஆர்வம். கீபோர்டு வாங்கிக் கொடுக்கக்கூட எனது பெற்றோருக்கு பொருளாதார வசதி இல்லை. அந்த நிலையிலும் சக்திக்கு மீறி கீபோர்டு வாங்கித் தந்தனர். ஆர்வத்துடன் இசை கற்று 2001-ம் ஆண்டு விஜய் நடித்த ‘தமிழன்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானேன். அதன்பிறகு பல படங்களுக்கு இசை அமைத்தேன். ‘மைனா’ திருப்புமுனையாக அமைந்தது.

‘மனம்கொத்திப் பறவை’ , ‘கும்கி’ படங்கள் என்னை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சென்றிருக்கிறது.பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இசை அமைப்பதில்லையே என்று கேட்கிறார்கள். எந்த ஹீரோ படத்தையும் ஒதுக்குவதில்லை. மீண்டும் விஜய் நடிக்க ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ‘ஜில்லா’ படத்துக்கு இசை அமைக்கிறேன். தொடர்ந்து இயக்குனர்கள் எழில், பிரபுசாலமன், நடிகர்கள் விக்ரம்பிரபு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களுக்கு இசை அமைக்க உள்ளேன். எனக்கு நடிக்கும் ஆசை இல்லை. இன்டர்நெட்டில் இமான் கம்போசர் என்ற பெயரில் வெப்சைட் தொடங்கி உள்ளேன். அதில் எனது நிகழ்ச்சிகள் பற்றி தகவல்கள் இடம்பெறும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum