தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிருத்விராஜ் நடிக்க தடை? சங்கத்தில் புகார்

Go down

பிருத்விராஜ் நடிக்க தடை? சங்கத்தில் புகார்  Empty பிருத்விராஜ் நடிக்க தடை? சங்கத்தில் புகார்

Post  ishwarya Wed Mar 13, 2013 2:16 pm

ஒப்புக்கொண்ட படத்தில் நடிக்க மறுத்ததால் பிருத்விராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘அபியும் நானும்’, ‘மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். மலையாள படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முரளிதரன் என்பவர் தயாரித்தார். ஆனால் இதே கதைபோல் இன்னொரு படம் உருவாவதாக தகவல் வந்ததையடுத்து பிருத்விராஜ் தொடர்ந்து நடிக்காமல் ஒதுங்கினார். இதையடுத்து ஷாஜி கைலாஷ், பிருத்விராஜ் இருவரும் வேறு படத்தில் இணைந்தனர். ‘லட்சக்கணக்கில் செலவு செய்து 1 நாள் ஷூட்டிங் நடத்தப்பட்டது.

ஆனால் திடீரென்று படத்தில் நடிக்க பிருத்விராஜ் மறுக்கிறார். இதனால் 4 ஆண்டுகளாக படத்தை தொடர முடியாமல் தவிக்கிறேன். இப்படத்தில் நடிக்க மறுக்கும் பிருத்விராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பட அதிபர் முரளிதரன் புகார் கொடுத்தார். இதையடுத்து பிருத்விராஜுக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டதாக மல்லுவுட்டில் தகவல் பரவியது. இதுபற்றி தயாரிப்பு சங்க நிர்வாகி சசி அய்யன்சிரா கூறும்போது, ‘பிருத்விராஜுக்கு நடிக்க தடை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள படத்தை பாதியிலேயே நிறுத்தியது பற்றி அவரிடம் பேசப்பட்டு வருகிறது. அதில் நடித்து தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. வரும் திங்கட்கிழமை பிருத்விராஜ், ஷாஜி கைலாஷ் ஆகியோருடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிருத்விராஜ் நடிக்க தடை விதிக்கப்படுமா?
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்
» பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கார்த்திக்கிடம் மோசடி – எஸ்.ஏ.சந்திரசேகரன் புகார்
» சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum