தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்?

Go down

சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்? Empty சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்?

Post  ishwarya Sat May 04, 2013 2:52 pm


நடித்து சம்பாதித்த சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவற்றை மீட்டுத் தரும்படியும் நடிகர் சங்கத்தில் புகார் செய்ய அஞ்சலி திட்டமிட்டு உள்ளார்.

வருகிற 24-ந்தேதி வரை புனேயில் தெலுங்கில் தயாராகும் இந்திப் படமான போல்பச்சன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதன் பிறகு சென்னை வந்து இந்த புகார் மனுவை நடிகர் சங்கத்தில் அளிக்கப் போவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

அஞ்சலிக்கு சொந்தமாக சென்னையில் வீடு, கார் உள்ளது. 2006-ல் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கற்றது தமிழ் படத்துக்கு மட்டும் சம்பளம் வாங்கவில்லை. பிறகு ரூ.50 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக சம்பளம் உயர்த்தி வாங்கினார். தமிழ் படங்களில் கூடுதல் சம்பளமாக ரூ.15 லட்சம் பெற்றார். தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கும் இன்னொரு படத்துக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசி உள்ளார்.

ஏற்கனவே சம்பாதித்த சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் தற்போது தன் கைவசம் பணம் எதுவும் இல்லை என்றும் அஞ்சலி கூறினார். இனிமேல் தான் படங்களில் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் அஞ்சலிக்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஆலோசனையின் பேரில்தான் சித்தி பாரதி தேவியை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கில் சம்பாதிக்கும் பணத்தையும் பிடுங்கி விடுவார்கள். வீட்டுக்கு போக வேண்டாம் என்றும் அவர்தான் தடுத்தாராம். அடுத்து ஏற்கனவே சம்பாதித்த சொத்துக்களை மீட்பது குறித்தும் ஆலோசனை கூறியுள்ளாராம். அதன் அடிப்படையில் தான் நடிகர் சங்கத்தை நாட அஞ்சலி முடிவு செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கார்த்திக்கிடம் மோசடி – எஸ்.ஏ.சந்திரசேகரன் புகார்
» பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்
» சொத்துக்களை மீட்க அஞ்சலி வழக்கு?: வக்கீல்களுடன் சந்திப்பு
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum