தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கார்த்திக்கிடம் மோசடி – எஸ்.ஏ.சந்திரசேகரன் புகார்
Page 1 of 1

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகின்றனர். இவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் தியாகராயநகரில் நடந்தது.
இதில் பங்கேற்று எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது:- தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த நிர்வாகத்தில் கேபிள் டி.வி. உரிமை வழங்கியதில் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அணி வென்றால் அந்த தொகை மீட்கப்படும். முதல்- அமைச்சரிடம் பேசி சிறு தயாரிப்பாளர்களுக்கான மானிய தொகையை பெற்றுத் தருவோம். டெலிவிஷன்களில் விளம்பர கட்டுப்பாடு கொண்டு வரப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
நடிகர் கார்த்திக் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது ஒன்பது தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டு அவர்கள் படங்களில் நடிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. தற்போது கார்த்திக் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ரூ.5 லட்சம் வசூலித்து ஒன்பது தயாரிப்பாளர்களுக்கும் பிரித்து கொடுப்பது என சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கார்த்திக் நடித்து ரிலீசான “கலக்குற சந்துரு”, ராவணன், மாஞ்சாவேலு ஆகிய படங்களில் இருந்து ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டது. அதில் 7 லட்சம் பணத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. கேபிள் டி.வி. மூலம் வசூலான பணத்திலும் மோசடி நடந்துள்ளது. சங்கம் சார்பில் வெளிவரும் இதழுக்கு விளம்பர கட்டணம் என்ற பெயரில் 400 தயாரிப்பாளர்களிடம் டி.டி. வாங்கி 4 ஆண்டாக வங்கியில் போடப்படவில்லை.
இது போன்ற பல குற்றற்சாட்டுகளை போலீசில் புகாராக அளித்துள்ளோம். எங்கள் அணி வென்றால் சேவை மையமாக சங்கம் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கே.ஆர்.ஜி., நடிகர் ராதாரவி, முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்
» தயாரிப்பாளர் சந்திரசேகரன் மோசடி வழக்கு.. முன்ஜாமீன் கேட்கும் செல்வராகவன்
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்
» சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்?
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum