தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை சாலைகளில் விழித்திரு ஷூட்டிங்

Go down

சென்னை சாலைகளில் விழித்திரு ஷூட்டிங்  Empty சென்னை சாலைகளில் விழித்திரு ஷூட்டிங்

Post  ishwarya Wed Mar 13, 2013 1:09 pm

சென்னை : ‘விழித்திரு’ படத்தின் ஷூட்டிங் சென்னை சாலைகளில் நடந்து வருகிறது. ‘அவள் பெயர் தமிழரசி’ படத்துக்குப் பிறகு மீரா கதிரவன் இயக்கும் படம், ‘விழித்திரு’. கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, வெங்கட்பிரபு, எரிகா பெர்னாண்டஸ், எஸ்.பி.பி.சரண், தம்பி ராமையா, பேபி சாரா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். திரில்லர் கதையான இதன் ஷூட்டிங் சென்னை சாலைகளில் நடந்து வருகிறது. இதுபற்றி இயக்குனர் மீரா கதிரவன் கூறியதாவது:

இது த்ரில்லர் கதை. வித்தியாசமான மனிதர்களை படத்தில் காண்பிக்க இருக்கிறோம். பரபரப்பாக படம் இருக்கும். கதையின் அவுட்லைனை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் இப்போது அது பற்றி பேச வேண்டாம். சென்னையில் நடக்கும் கதை. இதுவரை படங்களில் காட்டியிருக்கிற சென்னைக்கும் இந்தப் படம் காட்டப்போகும் சென்னைக்கும் வித்தியாசம் இருக்கும். சென்னையில் இப்படியொரு லொகேஷனா என்று ஆச்சரியப்படும் படி இடங்களைத் தேர்வு செய்து படமாக்கி வருகிறோம். சாலைகளில் ஷூட்டிங் நடந்து வருகிறது. விஜய் மில்டனின் கேமரா பேசப்படும் விதமாக இருக்கும். த்ரில்லர் கதை என்றாலும் இது புதுமையாக இருக்கும்.
இவ்வாறு மீரா கதிரவன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum