தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு

Go down

பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு Empty பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு

Post  meenu Wed Mar 13, 2013 12:59 pm


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையில் முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கீழச்சுரண்டை பட்டாளத்தை சேர்ந்த சங்கர்(வயது29) என்பவர் சாமியாடி குறி சொல்லி வந்தார். அவரிடம் குறி கேட்க வரும் பொதுமக்களிடம் நூதன முறையில் மோசடியும் செய்தார். அதன்படி பூஜை செய்யும் போது நகைகளை வைத்து பூஜையை மேற்கொண்டால் தோஷம் நீங்கும் என்று பொதுமக்களிடம் கூறினார்.

இதை நம்பிய பொதுமக்கள் பலர் சங்கரிடம் நகையை கழற்றி கொடுத்து பூஜையில் ஈடுபட்டனர். பூஜை முடிந்ததும் சங்கர் தங்க நகைகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகைகளை பொட்டலத்தில் வைத்து கொடுத்து ஏமாற்றி வந்தார்.

சங்கருக்கு உடந்தையாக அச்சங்குட்டத்தை சேர்ந்த கருமேனி (47), பெருமாள் மனைவி பரமேஸ்வரி(42) ஆகியோர் இருந்தனர். கடந்த மாதம் அச்சங்குட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பவருடைய வீட்டில் சங்கர் பூஜை செய்தார். அப்போது அவர் நகையை திருடுவதை குமரேசன் பார்த்து விட்டார்.

இதுகுறித்து அவர் சுரண்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சங்கர் சுரண்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரிடம் நகை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சாமியாரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பலரும் சுரண்டை போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து நெல்லை சரக டி.ஐ.ஜி.சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதரி உத்தரவின் பேரில் கூடுதல் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, ஜமால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகசாமி, ஆடிவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணை நடத்தி சங்கரன்கோவில் பகுதியில் பதுங்கியிருந்த சங்கரை கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரி, கருமேனி ஆகியோரை தேடி வந்தனர். அவர்களையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் லட்சுமிபுரத்தை சேர்ந்த புஷ்பம், அருணாசலம், கனியம்மாள் உள்பட பலரது வீட்டில் பூஜை நடத்தி 754 கிராம் நகைகள் வரை மோசடி செய்திருந்தனர். அதனை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகும் வைத்திருந்தனர்.

அந்த நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர்.அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் இருக்கும். போலி சாமியாரை கைது செய்த போலீசாரை டி.ஐ.ஜி.சுமித் சரண் பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

போலி சாமியார் சங்கர் பூஜை செய்வதாக ஏமாற்றி பொதுமக்களிடம் நகைகளை பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது புகார் கொடுத்தவர்களின் நகைகள் எல்லாம் மீட்கப்பட்டு உள்ளது. இது மாதிரி போலி சாமியார்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் .

கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதும்,வெடிகுண்டு வீசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூத்தங்குழியில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அருகே பஞ்சாயத்து கவுன்சிலர் தவசியின் மனைவி அம்பிகாவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பணம் ரூ.30 லட்சம் குறித்து மத்திய அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு டி.ஐ.ஜி.சுமித்சரண் கூறினார்.

அப்போது எஸ்.பி.விஜயேந்திரபிதரி உள்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது
» சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
» அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் 3 பேர் கைது
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» விபசாரத்தில் ஈடுபட்ட இலங்கை நடிகை கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum