இனி மோஷன் கேப்சரிங் இல்லாமல் படம் எடுக்க முடியாது: ஓவியர் டிராட்ஸ்கி மருது
Page 1 of 1

இந்திய சினிமாவின் வயது 100. பேசாத படம், பேசும் படம் என தொடங்கி இப்போது சினிமாவை டிஜிட்டல் முறையில் படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த விஞ்ஞான மாற்றங்கள் ஓரிரு நாட்களில் நடைபெறவில்லை. இதற்கு 100 ஆண்டுகள் பிடித்துள்ளது. பிலிம் ரோலில் சாதாரணமாக படம் பிடித்த காலம் மாறி இப்போது 5டி, 7டி, அனிமேஷன், மோஷன் கேப்சர் என டிஜிட்டல் முறையில் சினிமா எடுக்கப்படுவது வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது விவரிக்கிறார்...
‘‘சினிமா ஆரம்பிக்கப்பட்டபோது அவை முதலில் பிலிமில்தான் பதிவு செய்யப்பட்டன. பிறகு அதை புரொஜக்டர் கொண்டு திரையிட்டனர். சாதாரணமாக நடப்பது, ஓடுவது, பேசுவது போன்ற காட்சிகள் மட்டுமே படம் பிடித்த காலம் அது. தந்திர காட்சிகள் பற்றி அறியாத காலம் என்றும் சொல்லலாம். அந்த சமயத்தில்தான் ஜார்ஜ் மிலிஸ் என்ற இயக்குநர் தந்திர காட்சிகளை படம் பிடிக்கும் யுக்தியை கண்டு பிடித்தார். இவர் ஒரு முறை சாலையில் கேமராவை வைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் படம் பிடிக்கும் போது ஒரு ஆண் சாலை ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அவருக்கு பின் ஜட்கா வண்டி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கேமராவில் பிலிம் சிக்கிக் கொண்டது. அதை சரி செய்து மறுபடியும் படம் பிடித்தார். அந்த சமயத்தில் அங்கு ஒரு பெண் நடந்து வந்தார், ஜட்கா வண்டிக்கு பதில் கார் வந்தது. இதை படம் பிடித்த ஜார்ஜ் மிலிஸ், வீட்டுக்கு சென்று, தான் படம் பிடித்த பிலிமை திரையிட்டு பார்த்தார். அப்போது ஒரு ஆண், திடீரென்று பெண்ணாக மாறி நடந்து போவது போல் பதிவாகியிருந்தது!
அதை பார்த்த ஜார்ஜ் மிலிஸ், முதலில் ஆச்சரியப்பட்டார். ஒருவரை மற்றொருவராக இதன் மூலம் மாற்ற முடியும் என்று புரிந்துக் கொண்ட ஜார்ஜ் மிலிஸ், தன் படங்களில் இது போன்ற பல தந்திர காட்சிகளை இணைத்தார். நம் தமிழ் சினிமாவில் பெரும்பாலான மந்திர தந்திர படங்கள் இந்த முறையில்தான் படமாக்கப்பட்டன. இவரது இந்தக் கண்டுபிடிப்புதான் இன்று வளர்ந்து நிற்கும் சினிமாவில் பயன்படுத்தப்படும் பல தந்திர காட்சியின் முன்னோடி என்று சொல்லலாம். இவரை தொடர்ந்து ரே ஹாரி, தந்திர காட்சியை பயன்படுத்தி அதில் அனிமேஷன் என்ற புது யுக்தியை சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். திரைக்கதைக்கு தேவையான உருவத்தை முதலில் பொம்மையாக செய்து, அதன் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்தார். அதன் பிறகு அந்த காட்சியை திரையிட்டு பார்க்கும் போது பொம்மை கையை வீசி நடந்து வருவது போல் இருக்கும். இந்த யுக்தியை பல ஆங்கில மற்றும் தமிழ் படங்களில் பார்த்திருக்கலாம். ஆங்கில படமான ‘த பீஸ்ட் பிரம் 20,000 பான்டம்ஸ்’ மற்றும் தமிழில் வந்த மாயாபஜார்’ திரைப்படங்களே இதற்கு உதாரணம்...’’ என்று சொன்ன மருது, அதன் பின் வந்த இயக்குநர்கள் அனிமேஷன் உலகில் பெரும் புரட்சி ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
‘‘ஸ்டான்லி கூப்ரிக், அனிமேஷன் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்த காரணமானவர். 1968ம் ஆண்டு வெளிவந்த ‘2001 எ ஸ்பேஸ் ஓடிசி’ படம், முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட படம். அறிவியல் சார்ந்த கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் சினிமா உலகில் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் முறையாக அனிமேஷன் மூலம் வேற்று கிரக மனிதன் மற்றும் விண்கலத்தை சினிமாவில் அறிமுகம் செய்தவர் இவரே. அனிமேஷனுக்கு மற்றுமொரு முகத்தை காண்பித்த பெருமை இயக்குநர் ஜார்ஜ் லூகாசுக்கு உண்டு. இவரது ‘ஸ்டார் வார்ஸ்’ பட பாகங்களில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள், சினிமாவில் அனிமேஷன் கொண்டு எதுவும் செய்யலாம் என்பதை நிரூபித்தது. அதற்கு பின் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பில்பர்க் இயக்கிய ‘ஜூராசிக் பார்க்’ மற்றும் ஒரு பிரமாண்டத்தை உருவாக்கியது. ஒரு காலத்தில் சினிமாவின் ஒரு பகுதியில் திணிக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகள் படம் முழுதும் அனிமேஷனாக வர ஆரம்பித்தது. காரணம் அனிமேஷன் ஒரு அசைவை மிகவும் எளிதாக்கியதுடன் பிரமாண்டத்தையும் காண்பித்ததுதான்.
அனிமேஷனை தொடர்ந்து வந்ததுதான் 3டி. முப்பரிமாண முறையில் ஓவியர்கள் காட்சிக்கு ஏற்ப படம் வரைவார்கள். அதை கம்ப்யூட்டரில் செலுத்தி 3டி படமாக மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது இதற்கான சாப்ட்வேர்களும் உள்ளதால், அதன் மூலம் கீ ஃபிரேம் அனிமேஷன் முறை சாத்தியமானது. கீ ஃபிரேம் அனிமேஷனில் ஒரு பொருளின் ஆரம்பம் மற்றும் முடியும் நிலையை மட்டும் பதிவு செய்தால் போதும். மற்றதை கணினி பார்த்துக் கொள்ளும். ஒரு பொம்மையை நடக்க வைக்க வேண்டும் என்றால், அது ஒரு காலை தூக்கி வைப்பதை முதலில் ஒரு கீ ஃபிரேமாக பதிவு செய்வார்கள். இரண்டாவது காலுக்கு மற்றொரு கீ ஃபிரேம். இதை கணினியில் செலுத்தும் போது அது பொம்மை காலை தூக்கி வைத்து பத்தடி தூரம் நடந்து வருவது போல் இருக்கும். இதன் அடுத்த பரிமாணம்தான் மோஷன் கேப்சர். ஒரு பொருளின் அசைவை பதிவு செய்து அதை கணினியில் உள்ள மாதிரி உருவத்துக்கு மாற்றுவதுதான் மோஷன் கேப்சர். இந்த யுக்தியை கொண்டு ஒரு 2 மணி நேர சினிமாவை அமைக்க முடியும். சினிமாவில் போர் காட்சியை உருவாக்க வேண்டும் என்றால் மோஷன் கேப்சர் முறையை கையாளலாம். நாற்பது பேரின் உடலசைவுகளை பதிவு செய்து கணினி மூலம் 40,000 நபர்களாக மாற்றலாம். அவ்வாறு உருவாக்கப்பட்ட 3டி சினிமா தான் ‘அவதார்’ ஹாலிவுட் திரைப்படம். இந்தப் படத்தை முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் கொண்டு அமைத்துள்ளனர்.
ஒருவரது உடலில் உள்ள எலும்பு முட்டுகளை கம்யூட்டரில் உள்ள உருவத்துடன் இணைப்பார்கள். வெளியே இருக்கும் நபர் நகரும் போது கணினி உள்ளே இருக்கும் உருவம் நகரும். இப்போது உருவ அசைவு மட்டுமின்றி ஒரு உருவத்தின் அங்க அசைவுகள் முக பாவனைகள் எல்லாவற்றையும் மோஷன் கேப்சர் மூலம் படம்பிடிக்க முடியும். இந்த யுக்தி சினிமாவில் எட்டு வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. ஆனால், அப்போது இதை பயன்படுத்த செலவு அதிகமாகும் என்பதால், ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தனர். இன்று விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வருவதால், இதன் செலவும் கணிசமாக குறைந்து விட்டது. அதன் மூலம் சினிமா முழுக்க மோஷன் கேப்சரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் மோஷன் கேப்சர் இல்லாத படங்களே இருக்காது என்ற நிலை ஏற்படும்...’’ என்று சொன்ன ஓவியர் மருது, இப்போது ஒரு கேள்வி எழுந்திருப்பதாக குறிப்பிட்டார். ‘‘100 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் தந்திர காட்சி உருவானது. அது அப்படியே படிப்படியாக நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது. இன்று விஞ்ஞான உச்சத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பின் என்ன என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுந்துள்ளது. இதற்கான விடை, மற்றொரு விஞ்ஞான கண்டுபிடிப்பில் போய் முடியும். அது விஸ்வரூபமாக திரையில் மின்னும் என்பதில் சந்தேகமில்லை...’’ என்கிறார் ஓவியர் மருது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படம் எடுக்க போகிறார் சிம்ரன்
» குழந்தையை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன்? ஐஸ்வர்யாராய் விளக்கம்
» ஹீரோ இல்லாமல் உருவாகும் படம்!
» சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்
» இந்தியாவில் எந்தவித கட் இல்லாமல் டைட்டானிக் 3டி படம்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum