தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தையை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன்? ஐஸ்வர்யாராய் விளக்கம்

Go down

குழந்தையை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன்? ஐஸ்வர்யாராய் விளக்கம் Empty குழந்தையை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன்? ஐஸ்வர்யாராய் விளக்கம்

Post  ishwarya Sat Mar 30, 2013 5:14 pm

ஐஸ்வர்யாராய் மகள் ஆரத்யாவை புகைப்படம் எடுக்க இதுவரை அனுமதிக்கப்படவில்லை. குழந்தை பிறந்ததும் துணியால் மறைத்து கொண்டு சென்றனர். பொது இடங்களிலும் குழந்தை முகத்தை ஐஸ்வர்யாராய் மறைத்த படி சென்றார். சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த போது விமான நிலையத்தில் குழந்தையை போட்டோ கிராபர்கள் படம் எடுத்து விட்டனர். குழந்தை முகம் ஐஸ்வர்யாராய் கைகளால் மறைத்ததை மீறி ஒரளவு தெரிந்தது.

தற்போது அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழாவுக்கு குழந்தையை கொண்டு வந்து போது போட்டோ கிராபர்கள் படம் பிடித்துவிட்டனர். குழந்தையை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன் என்பது குறித்து ஐஸ்வர்யாராய் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது மகள் ஆரத்யா சிறு குழந்தையாக இருக்கிறாள். அவளை புகைப்படம் எடுப்பது வீடியோவில் படம் பிடிப்பது என்றெல்லாம் தொல்லை படுத்த விரும்பவில்லை. குடும்ப பொறுப்பு மற்றும் சினிமா, குழந்தையை வளப்பது என நிறைய கடமைகள் எனக்கு இருக்கின்றன. அந்த பணிகளை செய்வதில் சந்தோஷம் அடைகிறேன்.

என் குழந்தையுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். ஒரு தாயாக புகைப்படங்கள் எடுக்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அவளுக்கு சிரமம் வராமல் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum