தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிர்ணயம் தந்தை மகள் படம்

Go down

     நிர்ணயம் தந்தை மகள் படம்  Empty நிர்ணயம் தந்தை மகள் படம்

Post  ishwarya Wed Mar 13, 2013 11:35 am

சென்னை : பிசிஎஸ்எம் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘நிர்ணயம்’. விக்ரம் ஆனந்த், ரெஜினா, பேபி வேதிகா நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ஸ்ரீசரவணன் இயக்கி உள்ளார். வி.செல்வகணேஷ் இசை. இதன் பாடல்களை இசைக் கலைஞர் விக்கு விநாயக்ராம் வெளியிட, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பெற்றார். படம் பற்றி ஸ்ரீசரவணன் கூறும்போது, ‘‘திருமண வாழ்வில் கஷ்டங்களை அனுபவிக்கும் ஒருவர், தன் மகளுடன் சொந்த ஊருக்கு திரும்புகிறார்.

வழியில் சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள் அவர்களுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது கதை. தந்தைக்கும் மகளுக்குமான உறவையும் உலகில் மனிதன் சக மனிதனை எப்படி பார்க்கிறான் என்பதையும் யதார்த்தமாகச் சொல்லும் படம் இது’’ என்றார். தயாரிப்பாளர் துரை தயாநிதி, இயக்குனர்கள் ராதாமோகன், மதுமிதா, பாடகர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum