தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுமுகங்களை இயக்குகிறார் விக்ரமன்

Go down

    புதுமுகங்களை இயக்குகிறார் விக்ரமன்  Empty புதுமுகங்களை இயக்குகிறார் விக்ரமன்

Post  ishwarya Tue Mar 12, 2013 5:29 pm

புதுமுகங்களை வைத்து நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கி வருகிறார் விக்ரமன். அவர் கூறியதாவது: நினைத்தது யாரோ முழுக்க முழுக்க காதல் கதை. பேமலி ஆடியன்ஸை இழுக்கும் வலிமையான கரு கொண்டது. என் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இப்படத்திலும் அது இருக்கிறது. பூவே உனக்காக படத்தில் கடைசியில்தான் காதல் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் காதலும், காமெடியும் ஆரம்பத்திலிருந்தே இருக்கும். இளைய தலைமுறையினரை கவரும்.

இந்த கதை பெரிய நட்சத்திரங்களுக்கு பொருந்தாது. அதனால்தான் புதுமுகங்களை தேர்வு செய்தேன். ரிஜித், நிஷிஷா ஜோடி. இவர்களுடன் லியோ, கிரி, ரித்விகா, பினிஷ், சுபிக்ஷா, கார்த்திக்யோகி என எல்லோரும் புதுமுகங்கள். ஆர்.கே.பிரதாப் ஒளிப்பதிவு. பால்ராஜ் இசை. பி.ரமேஷ், டி.இமானுவேல் தயாரிப்பு. நட்சத்திர நடிகர், புதுமுக நடிகர் யாராக இருந்தாலும் அவர்களது மார்க்கெட் உயர கதைதான் காரணம். மாஸ் ஹீரோ என்பது முதல் இரண்டு ஷோவுக்கான பலமாக இருக்கும். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், புது ஹீரோவாக இருந்தாலும் கதை இல்லையென்றால் மக்கள் வீசி எறிந்து ஒதுக்கி விடுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum