ஐரோப்பா: சூப்பர் மார்க்கெட் உணவில் குதிரை இறைச்சி கலப்படம்
Page 1 of 1

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கும் ஆயத்த உணவுப் பதார்த்தங்களில் மாட்டிறைச்சி என்ற பெயரில் விற்கப்படும் பதார்த்தங்களில் குதிரை இறைச்சி கலப்படம் நிகழ்ந்துள்ள விவகாரம் தற்போது ஐரோப்பாவின் மற்ற மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்ற லசான்ஞெ, ஷெப்பர்ட்ஸ் பை, முஸாக்கா போன்ற உணவுப் பதார்த்தங்களில் அட்டையில் மாட்டிறைச்சி என்று போட்டிருந்தாலும், முழுக்க முழுக்க குதிரை இறைச்சியால் அப்பண்டங்கள் செய்யப்பட்டிருப்பதாக பரிசோதனைகள் காட்டியதை அடுத்து, அவை விற்பனையிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த உணவுப் பதார்த்தங்களை சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தயாரித்து வழங்கிய கொஜிமெல் என்ற பிரஞ்சு நிறுவனத்தின் மீதும், அவர்கள் எங்கிருந்து இறைச்சி வாங்கினார்கள் என்பதன் மீதும் எல்லோரின் கவனமும் குவிந்துள்ளது.
சென்ற மாதம் பிரிட்டனில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை இறைச்சி கலந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பொருட்கள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தன.
ஆயத்த உணவு உற்பத்தியில் தரக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் வழிவகைகள் பற்றி உணவு உற்பத்தியாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மாட்டிறைச்சியின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்களுக்கு அழுத்தங்கள் எழுந்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கிரிமினல் சக்திகள் இலாபம் பார்க்க முயற்சி செய்வதுதான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிகிறது என பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குதிரை இறைச்சி குற்றச்சாட்டால் ரோமானிய பிரதமர் கோபம்
» பதப்படுத்தப்பட்ட இறைச்சி அகால மரணத்துக்கு இட்டுச்செல்லும்'
» ஐரோப்பா முதல் உலகெங்கிலும் கால்பந்து சூதாட்டங்கள்: யூரோபோல்
» உணவுப் பொருட்களின் கலப்படம் பற்றி விழிப்புணர்வு அவசியம்:-
» இறைச்சி வடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum