தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐரோப்பா முதல் உலகெங்கிலும் கால்பந்து சூதாட்டங்கள்: யூரோபோல்

Go down

ஐரோப்பா முதல் உலகெங்கிலும் கால்பந்து சூதாட்டங்கள்: யூரோபோல் Empty ஐரோப்பா முதல் உலகெங்கிலும் கால்பந்து சூதாட்டங்கள்: யூரோபோல்

Post  meenu Mon Mar 11, 2013 12:02 pm

ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் பெருமளவில் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை கண்டறிந்துள்ளது.

ஐரோப்பாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம்,
மனித உரிமை

அதே அளவான எண்ணிக்கைகொண்ட மேட்ச்-ஃபிக்சிங் சூதாட்டங்கள் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடந்துள்ளதாக பல நாடுகளையும் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய யூரோபோல் தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதி-காண் போட்டிகள் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் நடந்த போட்டிகள் என பல்வேறு போட்டிகளின்போது ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது.

அணிகள் மற்றும் போட்டிகளுக்கான அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல குற்றக் கும்பல்கள் என இந்த சூதாட்டங்களில் 400க்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளதாக விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்டகாலமாக நடந்துவந்த இந்த விசாரணைகள் மூலம் ஏற்கனவே பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐரோப்பா: சூப்பர் மார்க்கெட் உணவில் குதிரை இறைச்சி கலப்படம்
» கால்பந்து சூதாட்ட சூத்திரதாரியாக ஒரு தமிழர் – திடுக்கிடும் பின்னணி
» ஆபாசபட நடிகையை கொலை செய்து நாய்க்கு போட்ட பிரபல கால்பந்து வீரர்! (படங்கள்)
» முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! – த்ரிஷா பெருமிதம்
» சுத்த வாக்கிய பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum