பீட்ஸா பெயரில் ஒரு படம்
Page 1 of 1
பீட்ஸா பெயரில் ஒரு படம்
ஸ்பைடர்மேன் படத்தில் அவர் பீட்ஸா டெலிவரி பாயாக இருப்பார். அவரால் சரியான நேரத்துக்கு பீட்ஸா டெலிவரி பண்ண முடியாமல் போகும். இது அவருக்கு பெருத்த தலைவலியாக அமையும். ஸ்பைடர்மேனுக்கே எனிமா கொடுத்த அந்த பீட்ஸா டெலிவரி கஷ்டங்களை வைத்து ஒரு படம் கோடம்பாக்கத்தில் தயாராகிறது. படத்தின் பெயரே பீட்ஸாதான்.
காஞ்சிபுரத்தைத் தாண்டினால் மொத்தமே தென் தமிழ்நாடு மொத்தமும் சேர்த்து ஐம்பது பீட்ஸா கடைகளாவது தேறுமா? அப்படிப்பட்ட ஒரு யாவாரத்தை படமாக்கும் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதுதான்.
பீட்ஸா பாயாக தென்மேற்குப் பருவக்காற்று ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயின் ரம்யா நம்பீஸன். இந்தமுறை சொந்தக்குரலில் டப்பிங் பேசப்போவதாக மிரட்டியிருக்கிறார். அட்டகத்தி படத்தை தயாரித்தவர்கள் பீட்ஸாவை தயாரிக்க கார்த்திக் சுப்பாராவ் என்பவர் இயக்குகிறார்.
பீட்ஸா கதை, விஜய் சேதுபதி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி பெயரில் படம்
» ரகுவரன் பெயரில் விருது
» மைசூரில் ராதாமோகனின் கௌரவம்
» நேரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம்
» சிங்கப்பூரில் மாற்றான் ஆடியோ
» ரகுவரன் பெயரில் விருது
» மைசூரில் ராதாமோகனின் கௌரவம்
» நேரில் சந்திக்கிறேன் - அமீர் கடிதம்
» சிங்கப்பூரில் மாற்றான் ஆடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum