ஆஸ்கர் போட்டியில் பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ்த் தாலாட்டு
Page 1 of 1

லைஃப் ஆஃப் பை என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ எழுதியும் பாடியும் இருக்கின்ற "கண்ணே கண்மணியே" என்ற தமிழ்த் தாலாட்டுப் பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காமசூத்ரா, வாட்டர் போன்ற படங்களுக்கு பின்னணி இசை அமைத்த கனடிய இசையமைப்பாளர் மைக்கேல் தன்னா இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார்.
பாம்பே ஜெயஸ்ரீ பேட்டி
ஆஸ்கர் பரிந்துரை: "நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் பொங்குகிறது"
லைஃப் ஆஃப் பை படத்தில் தான் எழுதிப் பாடிய தமிழ்த் தாலாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது தொடர்பில் பாம்பே ஜெயஸ்ரீ தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
தனது பாடல் பரிந்துரைக்கப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவதாக தமிழோசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த பாம்பே ஜெயஸ்ரீ, இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், ஆசான்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளை மீதுள்ள உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்த இந்தப் பாடலை எழுதியது ஒரு சிறப்பான அனுபவமாக தனக்கு அமைந்ததென்று அவர் கூறினார்.
இசையமைப்பாளர் மைக்கேல் தன்னாவும், படத்தின் இயக்குநர் அங்கஸ் லீயும், இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியம் பற்றிய அறிவும் விருப்பமும் உடையவர்கள் என்று ஜெயஸ்ரீ சுட்டிக்காட்டினார்.
அவர்கள் தந்த ஆலோசனைகளின் அடிப்படையில்தான் தான் இந்தப் பாடலை எழுதியதாக அவர் குறிப்பிட்டார்.
மும்பை கலையகம் ஒன்றில் இப்பாடலைப் பாடியதும் சிறப்பான அனுபவம் என்றும், உணர்வுபூர்வமாகவும் அனுபவித்தும் இப்பாடலைப் பாடியதாகவும் பாம்பே ஜெயஸ்ரீ கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்கர் பரிந்துரையில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாலாட்டு
» பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை
» ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
» ஆஸ்கர் போட்டியில் பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ்
» ஆஸ்கர் போட்டியில் அமலா பாலின் ஆகாஷத்தின்டே நிறம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum