லண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
Page 1 of 1
லண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் ககன் நரங் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
லண்டனின் புறநகர் பகுதியான வுல்லிச்சில் இருக்கும் துப்பாக்கிச் சுடும் அரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் ககன் நரங் 701.1 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடம் பெற்றார்.
முன்னதாக தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் 600 க்கு 598 புள்ளிகளைப் பெற்றார்.
இந்தப் பிரிவில் ருமேனியாவின் மொல்டோவியனோ 702.1 புள்ளிகள் பெற்றுத் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் இத்தாலியின் நிக்கோலோ கம்பிரியானிக்கு கிடைத்தது
எனுமும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர் என்று கருதப்பட்ட இந்தியாவின் துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தகுதிச் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். 47 பேர் போட்டியிட்ட தகுதிச் சுற்றுப் போட்டியில் பிந்த்ராவால் 16 ஆவது இடத்தையே பெற முடிந்தது.
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தகுந்தது.
தகுதிச் சுற்றில் மொத்தமாகவுள்ள 600 புள்ளிகளில் அவர் 594 புள்ளிகளை எடுத்து போட்டியிலிருந்து பிந்த்ரா வெளியேறியுள்ளார்.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் தகுதிச் சுற்றுப் போட்டியில் 600 க்கு 599 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் இருந்த இத்தாலியின் நிக்கோலோ கம்பிரியானியால் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்ற முதல் வீரரும் நிக்கோலா கம்பிரியானிதான்.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுடும் உலகப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.
இதில் பங்குபெற்ற இலங்கையின் மங்கள சமரக்கோன், 47 போட்டியிட்ட தகுதிச் சுற்றில் 45 ஆவது இடத்தைப் பெற்றார். அவர் 600 க்கு 583 புள்ளிகளை பெற்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லண்டன் பாராலிம்பிக்ஸ்:இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» 5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி!

» அதிர்ஷ்டத்தால் சாயினாவுக்கு வெண்கலப் பதக்கம்
» 5 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum