அதிர்ஷ்டத்தால் சாயினாவுக்கு வெண்கலப் பதக்கம்
Page 1 of 1

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிருக்கான இறகுப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கத்தை முடிவு செய்யும் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெஹ்வாலை எதிர்த்து ஆடிய சீனாவின் ஷின் வாங் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால் சாய்னாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், எல்லைக் கோட்டிலிருந்து ஷின் வாங் இறகுப் பந்தை எம்பிக் குதித்து வேகமாக அடிக்க முயன்ற போது அவரது முழங்கால் பிசகியது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் முழங்காலில் கட்டுடன் அவர் மீண்டும் ஆடத் தொடங்கி முதல் ஆட்டத்தை வென்று 1-0 என்று முன்னிலை பெற்றார். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் ஒரு புள்ளியை எடுத்த நிலையில் அவரால் கால்வலி காரணமாக தொடர்ந்து ஆட முடியாமல் போனதால், சாயினாவுடன் கைகுலுக்கி தான் ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
சாயினா நெஹ்வால்
இதனால் சாயினா நெஹ்வால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியின் இறகுப் பந்து ஆட்டத்தில் பதக்கம் பெற்றுள்ள முதல் இந்தியர் என்கிற பெருமையை சாய்னா பெற்றுள்ளர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாயினா காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தார்.
சீன விராங்கணை காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகாவிட்டால், அவரே வெற்றி பெற்றிருப்பார் என்று விளையாட்டு செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி
» லண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» 5 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பெண்
» எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் பறிப்பு
» லண்டன் பாராலிம்பிக்ஸ்:இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum