ஒரு தலை காதல் உண்டு - டி.ராஜேந்தர் உறுதி
Page 1 of 1
ஒரு தலை காதல் உண்டு - டி.ராஜேந்தர் உறுதி
ஒரு தலை ராகம் எடுத்த டி.ராஜேந்தர் கொஞ்ச காலமாக ஒரு தலை காதல் என்றப் படத்தை எடுக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
காலத்தை வெல்லும் காதல் கதை என்றெல்லாம் அவ்வப்போது அடுக்கு மொழியில் அறிவிப்பு வருகிறதே தவிர படப்பிடிப்புக்கு கிளம்புவதாக இல்லை.
திடீரென்று அம்மா மீது பரவசமாகி பகிரங்க ஆதரவு அறிக்கை வேறு வெளியிட்டார். சினிமாவை விட்டு தீவிர அரசியலில் இறங்கப் போகிறாரோ என்ற ஐயமும், பயமும் ஜனங்களிடம் ஏற்பட்டிருக்கிற நிலையில் அதனை போக்குவது நமது கடமை.
ஜோசிய வெறியரான டி.ஆர். நேற்று முன்தினம் காளஹஸ்தி கோயிலுக்கு தனது மனைவி, மகளுடன் வந்திருந்தார். அப்போது வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளை அவரிடம் கேட்டனர். அதில் ஒன்று உங்களின் அடுத்தப் படம் என்ன?
இதற்குப் பதிலளித்தவர், ஒரு தலை காதல் என்றப் படத்தை எடுக்கப் போகிறேன் என்றார். ஆக, டி.ஆர். இப்போதைக்கு சினிமாவிலிருந்து ரிடையர்ட் ஆகப் போவதில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தனது இளைய மகன் குறளரசன் இந்த வருட இறுதியில் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்ற அதிர்ச்சி தகவலையும் உறுதி செய்தார் டி.ராஜேந்தர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீரா ஜாஸ்மின் காதல் – உறுதி செய்த காதலர்
» சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
» ஒஸ்தியை நானே ரிலீஸ் செய்வேன் – டி.ராஜேந்தர் ஆவேசம்
» ஒரு தலைக் காதலை தொடங்கினார் டி.ராஜேந்தர்
» தெலுங்கு படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்
» சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
» ஒஸ்தியை நானே ரிலீஸ் செய்வேன் – டி.ராஜேந்தர் ஆவேசம்
» ஒரு தலைக் காதலை தொடங்கினார் டி.ராஜேந்தர்
» தெலுங்கு படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum