இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் வெற்றி பெறுமா?
Page 1 of 1

உலகளவில் இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் மேலும் மேலும் பிரபலமடைந்து வரும் வேளையில், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைப் போன்றே இலங்கையிலும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த வகை கிரிக்கெட் என்பது, ஒரு விளையாட்டு என்பதையும் கடந்து , தொலைக்காட்சியில், குடும்பத்துடன் கண்டு களிக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் லீக் எந்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பையும் வெற்றியையும் பெறும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த பிரீமியர் லீகின் ஒளிபரப்பு உரிமைகள் அளிக்கப்பட்ட விதம் கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இலங்கைப் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய வாரியம் தமது வீரர்களை அனுமதிக்காததும் இலங்கை தரப்பை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட்-ஓர் ஆய்வு
இலங்கையில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் வெற்றி குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
பலவிதமான பிரச்சினைகளை கடந்து இப்போது நடைபெற்றுவரும் இலங்கை பிரீமியர் லீகில் அணிகளின் உரிமையாளர்களால் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்பது இன்னமும் ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.
போட்ட முதலீட்டையும் அதிலிருந்து இலாபத்தையும் எடுப்பதற்கு ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறுகிறார் இந்த லீகை நடத்தும் சோமர்செட் எண்டர்டெயின்மெண்ட் வென்சர்ஸ் அமைப்பின் தலைவர் சந்தீப் ப்ரெம்மர்.
எனினும் இதற்கான வர்த்தகச் சந்தை சிறியதாக இருப்பதாலும் இந்திய வீரர்கள் வராததன் காரணமாகவும் இலங்கை பிரீமியர் லீக் இப்போது பெரிதாக முன்னேற்றம் அடையவில்லை என்றும் ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தான் நம்புவதாக கூறுகிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ருஹுணு ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருமான வக்கார் யூனூஸ்.
இந்தப் போட்டிகளின் போது சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தை தடுக்கவும் ஊக்க மருந்து பயன்பாட்டை தடுக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விழிப்புணர்வுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் செயலர் நிஷாந்த ரணசிங்க கூறுகிறார்.
இலங்கை பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் இந்த மாத இறுதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் முடிந்த பிறகே முதல் ஆண்டின் சாதக பாதகங்கள் குறித்து ஆராய முடியும் எனவும் பல்தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை: இன்றாவது வெற்றி பெறுமா?
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» வேலாயுதம் வெற்றி பெறுமா?
» ஐதராபாத்துடன் இன்று மோதல்: டெல்லி அணி முதல் வெற்றி பெறுமா?
» இலங்கை கிரிக்கெட் அணி உட்பூசல்களால் பல அணிகளாக பிரிந்துள்ளது: விளையாட்டுத்துறை அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum