பாகிஸ்தான் செல்ல வங்கதேச கிரிக்கெட் அணி தயக்கம்
Page 1 of 1

வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி ஒத்தி வைத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாகூர் நகரில் இரண்டு 20-20 போட்டிகளை விளையாட வங்கதேச அணி திட்டமிட்டிருந்தது.
தங்களது உத்தேசப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு பயணம் செய்துகொண்டிருந்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு அங்கு விளையாடுவதற்கு செல்லும் முதல் அணியாக வங்கதேசம் முன்வந்திருந்தது.
அப்போது இலங்கை அணி மீது ஒரு துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் லாகூர் கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.
எனினும் பல நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயிலோ அல்லது லண்டனிலோ போட்டிகளில் விளையாடின.
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதிதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், வங்கதேச அணியின் பயணம் உறுதி என்று கூறியிருந்தார்.
தமது வீரர்களின் பாதுகாப்பே தமக்கு மிகவும் முக்கியம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஜலால் யூனுஸ் பிபிசியின் வங்கமொழி சேவையிடம் தெரிவித்தார்.
எனினும் பாகிஸ்தானில் நிலைமை மேம்படும் போது அங்கு செல்வது குறித்து சிந்திக்கப்படும் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசம் இதே போன்று ஒரு முயற்சியை எடுத்த போது, அதற்கு டாக்கா உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர்
» பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்
» வங்கதேச இஸ்லாமியக் கட்சியின் உபதலைவருக்கு மரண தண்டனை
» தயக்கம் தவிர்ப்பது எப்படி?
» சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum