தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு!

Go down

சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு! Empty சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு!

Post  ishwarya Mon Feb 18, 2013 1:34 pm

இணையத்தில் கண்ட சுவாரஸ்யமான தகவல் இது. நண்பர் ஒருவர் என்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

நிலாவுல காலடி எடுத்து வெச்சதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோ என்று ஆச்சரியப்படுவீர்கள். நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?

Nell Armstrong

Aldrin

இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்

அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி.ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படை
யில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum